Monday, October 21, 2024

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்-அமைச்சர்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றை மத்திய அரசே முழுமையாக மேற்கொள்ள முடியும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

2021-ம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும் என்றும் அத்துடன் சாதிவாரியான கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்து நடத்த வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. விதிகளின்படி சாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள சில விவரங்களை மாநில அரசால் சேகரிக்க முடியாது. மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றை மத்திய அரசே முழுமையாக மேற்கொள்ள முடியும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு. சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் அனைவருக்கும் கல்வி பொருளாதாரம் வேலை வாய்ப்பில் சம உரிமை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024