Sunday, September 22, 2024

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் முதல்-அமைச்சர் இன்று தீர்மானம்

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித் தீர்மானம் கொண்டுவர உள்ளார்.

சென்னை,

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் சட்டசபையில் நடைபெற்றபோது, சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி இந்த கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று சட்டசபை கூடியதும் வினாக்கள், விடைகள் நேரத்திற்கு பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிய உள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் குறித்தும், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அரசினர் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.

2021-ம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும் என்றும் அத்துடன் இம்முறை சாதிவாரியான கணக்கெடுப்பை இணைத்தே நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்த உள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024