Saturday, September 21, 2024

நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும் – சமாஜ்வாதி எம்.பி

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும் – சமாஜ்வாதி எம்.பி. கோரிக்கைசெங்கோல்

செங்கோல்

நாடாளுமன்றத்திலிருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி கோரிக்கை வைத்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.

சுதந்திரத்தின் போது தமிழ்நாட்டின் திருவாவடுதுறை மடத்தின் ஆதீனங்களிடமிருந்து இந்தியாவின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேரு பெற்றுக்கொண்ட செங்கோலினை புதிய நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு பிரதமர் மோடியால் நிறுவப்பட்டது.

மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் நிறுவப்பட்ட நிலையில், அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தது.

இந்நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி எம்.பி, ஆர்.கே.சவுத்ரி செங்கோலை அகற்ற வேண்டும் என்றார். மன்னர்தான் கையில் செங்கோலுடன் நீதி பரிபாலனம் செய்வார் என்றும், நாடாளுமன்றத்தில் செங்கோலை வைப்பது ஏற்புடையதல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டதாக கூறுவது கட்டுக்கதை – பத்திரிகையாளர் என்.ராம் கருத்து

மேலும் செங்கோலுக்கு பதிலாக அரசியலமைப்பின் மாதிரியை வைக்க வேண்டும் என சமாஜ்வாதி எம்.பி. கேட்டுக்கொண்டுள்ளார்.

செங்கோலுக்கு எழுந்துள்ள எதிர்ப்பு தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. எதிர்ப்புக்கு இடையிலும் குடியரசுத் தலைவர் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற நாடாளுமன்றத்திற்கு வந்தபோது அவருக்கு முன் வந்த ஊழியர் செங்கோலை ஏந்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Parliament
,
PM Modi
,
samajwadi party
,
Sengol

You may also like

© RajTamil Network – 2024