ஆஸ்கர் குழுவில் தேர்வான அஸ்ஸாமிய பெண் இயக்குநர்!

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

ஆஸ்கர் குழுவில் தேர்வான அஸ்ஸாமிய பெண் இயக்குநர்! ஆஸ்கர் அகாதெமி குழுவில் அஸ்ஸாமிய பெண் இயக்குநர் ரிமா தாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ரிமா தாஸ்ரிமா தாஸ்

ஆஸ்கர் அகாதெமி குழுவில் அஸ்ஸாமிய பெண் இயக்குநர் ரிமா தாஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் சார்பாக 91ஆவது ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட வில்லேஜ் ராக்ஸ்டார் படத்தினை இயக்கியவர் அஸ்ஸாமிய பெண் இயக்குநர் ரிமா தாஸ். இந்தப் படத்துக்காக தேசிய விருதும் வென்றுள்ளார். புல்புல் கேன் சிங் என்ற படமும் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.

நடிகையாகவும் இயக்குநராகவும் அறியப்படும் ரிமா தாஸ் தற்போது ஆஸ்கர் அகாதெமி தேர்வுக்குழுவில் இணைந்துள்ளார்.

இந்தாண்டு 68 நாடுகளில் இருந்து 487 புதிய நபர்களை ஆஸ்கர் குழுவில் இணைத்துள்ளார்கள். இதில் 46 சதவிகிதம் பெண்கள் இருக்குமாறும் 41 சதவிகிதம் இனக்குழுக்களை சார்ந்தவர்களாகவும் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

குறிப்பாக அமெரிக்காவை தவிர்த்து 56 சதவிகிதம வெளிநாட்டு நபர்களை கொண்டதாக ஆஸ்கர் குழு தயாராகியுள்ளது.

இந்தியாவில் இருந்து நடிகர் ஷபானா ஆஸ்மி, இயக்குநர்கள் ராஜமௌலி, ஆன்ந்த குமார் டக்கர், தயாரிப்பாளர் ரிதேஷ் சித்வானி, ஷுட்டல் ஷர்மா, ஆவண பட இயக்குநர்கள் நிஷா, பஹுஜா ஹேமா திரிவேதி ஆகியோர் ஆஸ்கர் தேர்வுக் குழுவில் இணைந்துள்ளார்கள்.

இந்தத் தேர்வு குறித்து இயக்குநர் ரிமா தாஸ், “ஆஸ்கர் குழுவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மிகவும் கௌரமாகவும் ஆச்சர்யமாகவும் உணர்கிறேன். 2019இல் வில்லேஜ் ராக்ஸ்டார் படத்திலிருந்து எனக்கும் ஆஸ்கருக்குமான பயணம் தொடர்கிறது. இந்த அற்புதமான குழுவில் உறுப்பினராக இணைந்து கலையின் சிறந்த படைப்பை அங்கீகரிக்கவும் சினிமாவின் அதிகாரத்தையும் அற்புதத்தையும் கொண்டாட நான் ஆவலுடன் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024