Saturday, September 21, 2024

டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டி: 56 ரன்களில் ஆப்கானிஸ்தானை சுருட்டிய தென்ஆப்பிரிக்கா

by rajtamil
0 comment 24 views
A+A-
Reset

டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி 5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து, 27 ரன்கள் எடுத்து இருந்தது.

தரவுபா,

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டி இன்று தரவுபா நகரில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

அந்த அணி 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து உள்ளது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குர்பாஸ் (0), இப்ராகிம் ஜத்ரான் (2) ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து விளையாடிய நயீப் (9), முகமது நபி (0) மற்றும் கரோட் (2) ரன்களில் வெளியேறினர்.

இதனால், 5 ஓவர்கள் முடிவில் 27 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை தழுவும் வகையில் விளையாடி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தென்ஆப்பிரிக்க அணி விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றி பெறும் முனைப்பில் அதிரடியாக விளையாடி வருகிறது.

தொடர்ந்து, உமர்ஜாய் (10), கரீம் (8), அகமது (0), அணியின் கேப்டன் ரஷீத் கான் (8), நவீன்-உல்-ஹக் (2) ரன்களில் ஆட்டமிழந்தனர். பரூகி (2) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த சூழலில், 11.5 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மிக குறைவாக 56 ரன்கள் எடுத்துள்ளது.

தென்ஆப்பிரிக்க அணியின் ஷாம்சி மற்றும் ஜேன்சன் தலா 3 விக்கெட்டுகளும், ரபடா மற்றும் நார்ஜே தலா 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து, 57 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தென்ஆப்பிரிக்க அணி அடுத்து விளையாட உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024