அரசியல் சாசனத்தின் மீதான நேரடி தாக்குதலின் மிகப்பெரிய இருண்ட அத்தியாயம் அவசரநிலை: ஜனாதிபதி முர்மு

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

புதுடெல்லி,

18-வது மக்களவையின் முதல் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாடினார். முன்னதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு குதிரைப்படை புடைசூழ நாடாளுமன்றம் அழைத்து வரப்பட்டார். அவரை பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வரவேற்றனர். இந்த நிலையில் மக்களவை, மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியதாவது:-

"இன்னும் சில மாதங்களில் இந்தியா குடியரசு நாடாக 75 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ளது. இந்திய அரசியலமைப்பு கடந்த பத்தாண்டுகளில் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் தாங்கி நிற்கிறது. நாட்டில் அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்ட பிறகு, அரசியல் சாசனத்தின் மீது பல தாக்குதல்கள் நடந்துள்ளன.

1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை பிரகடனம் (எமர்ஜென்சி) அரசியல் சாசனத்தின் மீதான நேரடித் தாக்குதலின் மிகப்பெரிய மற்றும் இருண்ட அத்தியாயமாகும். ஆனால் அத்தகைய சக்திகளுக்கு எதிராக நாடு வெற்றி கண்டது. இந்திய அரசியலமைப்பை வெறும் நிர்வாக ஊடகமாக மாற்ற முடியாது.

மேலும் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படும்போது, இந்தியா தோல்வியடையும் என்று நம்பும் சக்திகள் உலகில் இருந்தன. அதன்பின்னர், அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. அப்போது இந்த சட்டத்தின் மீது பல தாக்குதல்கள் நடத்தன." இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி தனது உரையில் அவசரநிலையை (எமர்ஜென்சி) குறிப்பிட்டபோது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

You may also like

© RajTamil Network – 2024