‘செங்கோல்’ நாடாளுமன்றத்தில் நடப்பது என்ன?

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

‘செங்கோல்’ நாடாளுமன்றத்தில் நடப்பது என்ன?'செங்கோல்' நாடாளுமன்றத்தில் நடப்பது என்ன?

டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டபோது, மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்பட்டது. அப்போதிலிருந்து செங்கோலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வருகிறது. இந்தநிலையில், நாடாளுமன்ற மக்களவையில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழும். செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும் எனவும் ஆர்.கே.சவுத்ரி கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் ஆர்.கே.சவுத்ரியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் செங்கோலை அகற்ற வேண்டும் என்ற சமாஜ்வாதி உறுப்பினரின் கருத்து சரியானது என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும் – சமாஜ்வாதி எம்.பி. கோரிக்கை

எதிர்க்கட்சிகளுக்கு செங்கோலின் மதிப்பு தெரியாது என்றும், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் மதிப்பு தெரியாது எனவும் அவர் மத்திய இணையமைச்சர் எல், முருகன் கூறியுள்ளார். இந்தநிலையில், செங்கோல் என்பது கொடுங்கோலின் சின்னம் கிடையாது என்றும், மக்களாட்சியின் சின்னம் என்றும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

உங்கள் சருமத்தை முதுமை அடையச் செய்யும் 8 வாழ்க்கை முறை பழக்கங்கள்.!
மேலும் செய்திகள்…

இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாசாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ள அவர், எதிர்க்கட்சியினரின் கருத்து அவர்களது அறியாமையையும் காட்டுகிறது என்றும், குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Parliament
,
Sengol

You may also like

© RajTamil Network – 2024