கனமழையால் தில்லி ஸ்தம்பித்தது!

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

கனமழையால் தில்லி ஸ்தம்பித்தது!தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் தலைநகர் முழுவதும் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கனமழையால்  சாலைகளில்  தேங்கியுள்ள தண்ணீர்.தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீர்.

புதுதில்லி: தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் தலைநகர் முழுவதும் சாலைகளில் தண்ணீர் தேங்கியது மற்றும் தில்லி விமான நிலையத்தின் டெர்மினல்-1 இன் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 7 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியில் கடந்த ஆண்டு பருவமழை ஜூன் 26 இல் தொடங்கியது. இது 2022-இல் ஜூன் 30, 2021-இல் ஜூலை 13 மற்றும் 2020-இல் ஜூன் 25 இல் தொடங்கியது என ஐஎம்டியின் தரவுகளின்படி தெரிய வருகிறது.

பருவமழையின் தொடக்கமாக வியாழக்கிழமை காலை, தில்லி மற்றும் என்சிஆா் பகுதியில் பலத்த மழை பெய்தது. வெப்பநிலை 35.4 டிகிரி செல்சியஸாக குறைந்ததால், அப்பகுதி மக்களுக்கு கடுமையான வெப்பத்திலிருந்து மிகவும் தேவையான நிவாரணம் கிடைத்தது.

இதற்கிடையே, சனி, ஞாயிறு ஜூன் 29, 30 ஆகிய தினங்களில் தில்லியின் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று தில்லி மற்றும் பிற மாநிலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் தலைநகர் முழுவதும் சாலைகளில் தண்ணீர் தேங்கியது மற்றும் தில்லி விமான நிலையத்தின் டெர்மினல்-1 இன் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 7 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாலை 3 மணியளவில் பெய்த மழையில் சஃப்தர்ஜங் வானிலை நிலையத்தில் 153.7 மிமீ மழை பதிவாகியுள்ளது.

இதனிடையே வெள்ளம் சூழ்ந்த சாலைகள் மற்றும் நீண்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டுள்ள வாகனங்களின் விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவை தற்போது வைரலாகி வருகிறது.

போக்குவரத்து போலீசார் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஒய்-பாயிண்ட் சலீம்கர் மற்றும் நிகம்போத் காட் அருகே தண்ணீர் தேங்கியுள்ளதால் சாந்திவனில் இருந்து ஐஎஸ்பிடி மற்றும் அதற்கு நேர்மாறாக வெளிவட்ட சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்ப உங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு தெரிவித்துள்ளார்.

ஐடிஓ, வீர் பண்டா பைராகி மார்க், தௌலா குவான் ஆகிய இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வானங்கள், வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளில் 124.5 முதல் 244.4 மிமீ வரை மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தில்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 7 பேர் காயமடைந்துள்ளதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024