தில்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலி, 7 பேர் காயம்

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

தில்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலி, 7 பேர் காயம்தில்லியில் கனமழை பெய்துவரும் நிலையில், விமான நிலையத்தின் டெர்மினல்-1 மேற்கூரை வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்,தில்லி விமான நிலைய டெர்மினல்-1 மேற்கூரை இடிந்து விழுந்ததை நேரில் பார்வையிட்டு சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறியும்  மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு.தில்லி விமான நிலைய டெர்மினல்-1 மேற்கூரை இடிந்து விழுந்ததை நேரில் பார்வையிட்டு சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறியும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு.

புதுதில்லி: தில்லியில் கனமழை பெய்துவரும் நிலையில், விமான நிலையத்தின் டெர்மினல்-1 மேற்கூரை வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். டெர்மினல்-1 இல் இருந்து விமானங்கள் சேவை நிறுத்தப்பட்டுள்ளன.

மேற்கூரை ஷீட் தவிர, சப்போர்ட் தூண்களும் இடிந்து விழுந்ததில் முனையத்தின் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கனமழைக்கு மத்தியில் விமான நிலையத்தின் டெர்மினல்-1 இன் மேற்கூரையின் ஒரு பகுதி காலை 5:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு நடைவடிக்கையில் இடுபட்டனர்.

இதில், 8 பேர் காயமடைந்ததாகவும், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தில்லி தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் மேற்கூரை ஷீட் தவிர, சப்போர்ட் தூண்களும் இடிந்து விழுந்ததால், டெர்மினலின் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், வாகனங்கள் சேதமடைந்ததாகவும், காயமடைந்த எட்டு பேரில் இரண்டு பேர் சப்போர்ட் தூண்கள் விழுந்து சேதமடைந்த காரில் இருந்து மீட்கப்பட்டதாகவும், காயமடைந்த 8 பேரும் விமான நிலையத்தில் இருந்து பிசிஆர் வேன்கள் மூலம் மேதாந்தா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதே நேரத்தில் கூரையின் கட்டமைப்பின் கீழ் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடங்கியது. இதில், மேற்கூரையின் இரும்பு கம்பி விழுந்ததில் அந்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனது காரில் அமர்ந்திருந்த ஒரு கார் ஓட்டுநரும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெர்மினலில் இருந்து அனைத்து பரிசோதனைகள் மற்றும் புறப்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தில்லி சர்வதேச விமான நிலையம் தெரிவித்தது.

டெர்மினல் 1 இல் இருந்து செயல்படும் இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய இரண்டு விமானங்களின் விமானச் செயல்பாடுகள் பிற்பகல் 2 மணி வரை நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், டெர்மினல் 2 மற்றும் 3 இல் இருந்து அவர்களின் திட்டமிடப்பட்ட விமானங்களின் புறப்பாடுகளை மாற்றியமைக்க விமான நிறுவனங்களுடன் நாங்கள் ஆலோசனை நடத்தி வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தில்லி விமான நிலையத்தின் நிலைமையை நேரில் கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் உதவுமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு கூறியுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024