Monday, September 23, 2024

டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விபத்து – 4 பேர் காயம்

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

புதுடெல்லி,

டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் பெய்த தொடர் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆங்காங்கே மழைநீர் தேங்குவதால் டெல்லி நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் வாகனங்கள் சிக்கியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. கனமழை காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்ததில் நிறுத்தி வைத்திருந்த கார்கள் பலத்த சேதமடைந்தன. இதில் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#WATCH | 4 people were injured after a roof collapsed at the Terminal-1 of Delhi airport.
(Video source – Delhi Fire Service) pic.twitter.com/Uc0qTNnMKe

— ANI (@ANI) June 28, 2024

You may also like

© RajTamil Network – 2024