Friday, September 20, 2024

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டிரைலர் 29ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

by rajtamil
0 comment 37 views
A+A-
Reset

'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

சென்னை,

ரோமியோ' படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'மழை பிடிக்காத மனிதன்'. விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிருத்வி அம்பெர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி, அச்சு ராஜாமணி, ராய், வாகு மாசான், ஹரி டபுசியா ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டிரைலர் வரும் 29ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Original Article

You may also like

© RajTamil Network – 2024