Friday, September 20, 2024

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் அசாம்… 6 லட்சம் மக்கள் பாதிப்பு

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் அசாம்… 6 லட்சத்தும் அதிகமான மக்கள் பாதிப்பு!கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் அசாம்... 6 லட்சத்தும் அதிகமான மக்கள் பாதிப்பு!

அசாம் மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், ஆறரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு மாநிலமான அசாமில், கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகள் உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் இதுவரை ஆறரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விளம்பரம்

இந்த நிலையில், Golaghat பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்துப் பேசினார்.

கடலை ரசித்த படி மீண்டும் ரயிலில் பயணிக்கலாம்.!
மேலும் செய்திகள்…

இதனிடையே, குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், ஜுனாகத் மாவட்டத்தின் 30 கிராமங்கள், பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரத்தில் ஜுனாகத் மாவட்டத்தின் வந்தாளி கிராமத்தில் 36.1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. பல இடங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் மூழ்கிக் கிடக்கின்றன.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Assam
,
Heavy rain
,
Heavy Rainfall
,
Weather News in Tamil

You may also like

© RajTamil Network – 2024