பல்லக்கில் சென்று தருமபுரம் ஆதீனம் வழிபாடு

by rajtamil
Published: Updated: 0 comment 38 views
A+A-
Reset

தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் சுமந்து சென்ற நாற்காலி பல்லக்கில் குருமூர்த்தங்களுக்கு சென்று வழிபாடு செய்தார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோவிலில் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிலையில், சித்தியடைந்த முந்தைய ஆதீனகர்த்தர்கள் சமாதி அடைந்த இடத்தில் (குருமூர்த்தங்கள்) சிறப்பு வழிபாடு நடந்தது.

இன்று காலை 6 மணியளவில் ஆதீனத்தின் பூஜாமூர்த்தியான சொக்கநாத பெருமான் பூஜைமடத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. இதில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள், பின்னர் தம்பிரான் சுவாமிகள் புடைசூழ ஆதீனத்தில் இருந்து பக்தர்கள் சுமந்து சென்ற நாற்காலி பல்லக்கில் குருமூர்த்தங்களுக்கு சென்றார். தொடர்ந்து அங்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

பின்னர் அங்கிருந்து வனதுர்க்கை கோவிலுக்கு சென்று அங்கும் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து காலை 10.30 மணியளவில் ஞானாம்பிகை உடனான ஞானபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள், ருத்ராபிஷேகம் செய்யப்பட்டு குருமகா சன்னிதானம் முன்னிலையில் மகாதீபாராதனை நடந்தது.இதில் ஆதீன தம்பிரான் சாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

You may also like

© RajTamil Network – 2024