Monday, September 23, 2024

இருமல் டானிக் பாட்டிலை விழுங்கிய பாம்பிற்கு நேர்ந்த விபரீதம்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

இருமல் டானிக் பாட்டிலை விழுங்கிய பாம்பிற்கு நேர்ந்த விபரீதம்.. ஷாக் வீடியோஉயிருக்கு போராடிய பாம்பு

உயிருக்கு போராடிய பாம்பு

இருமல் டானிக் பாட்டிலை விழுங்கியதால் நல்ல பாம்பு ஒன்று திணறிக் கொண்டிருந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

கடலின் ஆழம் முதல் மலை உச்சி வரை, மனிதர்கள் சிறிய பிளாஸ்டிக் பொருட்களால் பூமியை சேதப்படுத்தியுள்ளனர். இதன் விளைவாக, வன விலங்குகள் அடிக்கடி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கை மென்று சாப்பிடுவதால், அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்துள்ளது.

அங்கு பிளாஸ்டிக் இருமல் பாட்டிலை நல்ல பாம்பு ஒன்று விழுங்கி விட்டது. இதனால் திணறிக் கொண்டு உயிருக்கு போராடிய அதனை தன்னார்வலர்கள் மீட்டுள்ளனர்.

விளம்பரம்இதையும் படிங்க – உண்மையிலே வெள்ளை காக்கா இருக்குப்பா….ஹவுராவில் மீட்கப்பட்ட வெள்ளை காகம்

இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. பாம்பின் வாயில் சிக்கிய பிளாஸ்டிக் பாட்டிலை சரியான முறையில் தன்னார்வலர்கள் வெளியேற்றி பாம்பின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

A Common cobra swallowed a cough syrup bottle in Bhubaneswar & was struggling to regurgitate it.
Volunteers from snake help line gently widened the lower jaw to free the rim of the base of the bottle with great risk & saved a precious life.
Kudos 🙏🙏 pic.twitter.com/rviMRBPodl

— Susanta Nanda (@susantananda3) July 3, 2024

விளம்பரம்

இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அக்கறையின்றி பிளாஸ்டிக் குப்பைகளை வெவ்வேறு இடங்களில் வீசுவதால் உயிரினங்கள் பாதிக்கப்படுவதாகவும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
viral
,
Viral Video

You may also like

© RajTamil Network – 2024