Monday, September 23, 2024

‘மாமேரு விழா’… கவனம் ஈர்த்த ராதிகா மெர்ச்சன்ட் ஆடை… சில தகவல்கள்!

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

‘மாமேரு விழா’… கவனம் ஈர்த்த ராதிகா மெர்ச்சன்ட் ஆடை… சில பின்னணி தகவல்கள்!‘மாமேரு விழா’... கவனம் ஈர்த்த ராதிகா மெர்ச்சன்ட் ஆடை... சில பின்னணி தகவல்கள்!

அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் மும்பையில் தொடங்கின. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது.

திருமணத்திற்கான தயாரிப்புகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், குஜராத்தி திருமணங்களின் முக்கிய நிகழ்வான மாமேரு சடங்கு, முகேஷ் அம்பானியின் இல்லமான ஆன்டிலியாவில் கோலாகலமாக தொடங்கியது. மாமேரு சடங்கு என்பது மணமகளை அவரது தாய் மாமன் சீர்வரிசையுடன் சந்திக்கும் நிகழ்வாகும்.

விளம்பரம்

இனிப்பு, புடவை, நகைகள் வெள்ளை நிற வளையல்கள் மற்றும் உலர் பழங்களுடன் மணமகளின் தாய் மாமா அவரை சந்திப்பார். இந்த சடங்கு மணமகள் தனது புதிய பயணத்தைத் தொடங்கும்போது தாய்வழி குடும்பத்தின் ஆசீர்வாதங்களையும் நல்வாழ்த்துக்களையும் பெறுவதை குறிக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காக முகேஷ் அம்பானியின் இல்லம் பூக்கள் மற்றும் விளக்குகளால் மிக பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில், பல பாலிவுட் பிரபலங்களும் கலந்துகொண்டு அனந்த் மற்றும் ராதிகாவை வாழ்த்தினர்.

விளம்பரம்

மணமகள் ராதிகா மெர்ச்சன்ட், பிங்க் நிறத்தில் பாந்தினி லெஹெங்காவை அணிந்திருந்தார். அதில் தங்க ஜரிகையின் ஓரத்தில், துர்கா தேவியின் ஸ்லோகம் பொறிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதோடு, ராதிகா தனது தாயாரின் அணிகலன்களை அணிந்திருந்ததாக தெரிகிறது. மாமேரு நிகழ்வுக்காக பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா ராதிகா மெர்ச்சன்ட்-ன் ஆடையை வடிவமைத்துள்ளார். ராய் பந்தேஜ் என்றழைக்கப்படும் Tie-Dye நுட்பத்தை பனாரசி ப்ரோகேட் துணியில் இந்த லெஹெங்கா உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

Also Read |அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழா: மேடையை அதிரவைக்க வரும் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பெய்பர்!

அனந்த் மற்றும் ராதிகாவின் திருமண சடங்குகள் ஜூலை 12ஆம் தேதி தொடங்கும். முதல் விழா ‘ஷுப் விவா’ என்று அழைக்கப்படுகிறது. இந்திய பாரம்பரியத்தில் அனைவரும் தோன்றுவர். ஜூலை 13 ‘ஷுப் ஆஷிர்வாத்’ தினமாக இருக்கும். மேலும், ஆடைக் குறியீடு என்பது இந்திய முறையாகும். ஜூலை 14 ‘மங்கல் உத்சவ்’ அல்லது திருமண வரவேற்பு ஆகும். இந்த செயல்பாடுகள் அனைத்தும் பிகேசியில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடைபெறும்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS

You may also like

© RajTamil Network – 2024