Monday, September 23, 2024

கார்கால குறுவைப் பயிர் சாகுபடிக்கு தமிழக அரசு உதவிட வேண்டும்- ஜி.கே.வாசன்

by rajtamil
Published: Updated: 0 comment 38 views
A+A-
Reset

விவசாயிகளை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

தமிழக அரசு கார்காலத்தில் (மே – ஜூன் மாதத்தில்) விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆண்டு தோறும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதன் மூலம் டெல்டா மாவட்டப் பகுதிகளில் சுமார் 12 லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் சாகுபடி செய்யும் நிலை இந்த ஆண்டு மாறியுள்ளது. தமிழக அரசு தஞ்சை மாவட்டப் பகுதி விவசாயிகளுக்கு தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டு 45 கிலோ யூரியா, 25 கிலோ பொட்டாசியம், 50 கிலோ டி.ஏ.பி. அம்மோனியம் பாஸ்பேட் 25 கிலோ (2700 ரூபாய்) அளவில் உரம் கொடுக்கப்படும்.

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுக்கா, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டப் பகுதிகளிலும் மின்மோட்டார் மூலம் ஏரி, குளம் சார்ந்த பகுதிகளில் குறுவை சாகுபடி செய்து வருகின்றனர்.இச்சூழலில் தமிழக அரசு குறுவை தொகுப்புத் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் மும்முனை மின்சாரம் குறைந்தது 18 மணி நேரம் வழங்க வேண்டும் என்றும் காப்பீட்டுத் திட்டத்தை குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மேலும் விவசாய கூட்டுறவு சங்க மூலம் காலத்தே கடன் வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். எனவே இவற்றை உறுதி செய்து கொண்டு விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024