Saturday, September 21, 2024

அதர்வா நடிப்பில் உருவாகும் ‘டிஎன்ஏ’ படத்தின் பாடல் குறித்த அறிவிப்பு!

by rajtamil
0 comment 27 views
A+A-
Reset

அதர்வா நடிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் பாடல் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் அதர்வா, பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது ஒத்தைக்கு ஒத்த போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் இவர் எம் ராஜேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கிறார். இதற்கிடையில் அதர்வா டிஎன்ஏ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடிக்கிறார். இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்குகிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

கடந்த 2016-ம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். அதன் பின்னர் 'மான்ஸ்டர்', 'பர்ஹானா' போன்ற திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார். 'டிஎன்ஏ' படம் ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X5️⃣ Songs x 5️⃣ New Music Composers ️Unveiling the Music Composers of #DNAmovie Today at 7 PM Starring @Atharvaamurali & #NimishaSajayan Written & directed by @nelsonvenkat Produced by @Olympiamovis@Ambethkumarmla@Filmmaker2015@[email protected]/ypX8kMYjni

— Olympia Movies (@Olympiamovis) July 5, 2024

அதே சமயம் இது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து சமீபத்தில் டப்பிங் பணிகளும் தொடங்கப்பட்டது. அந்த வகையில் இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் டிஎன்ஏ படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 7 மணி அளவில் வெளியாகும் என்று பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Original Article

You may also like

© RajTamil Network – 2024