Monday, September 23, 2024

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-மந்திரி நேரில் ஆய்வு

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

கவுகாத்தி,

அசாமில் பெய்த கனமழையால் மாநிலத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக 29 மாவட்டங்களில் உள்ள 22 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயல் பாதிப்புகளில் சிக்கி இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் மாயமாகியுள்ளனர்.

மாநிலம் முழுவதும் 698 முகாம்களில் மொத்தம் 39,338 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திர்ருகார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு மீண்டும் மின்சாரத்தை வழங்குமாறும் முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மாவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் விபத்துகளை தவிர்ப்பதற்காகவே மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், நிலைமை சீரானதும் உடனடியாக மின்சாரம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024