Monday, September 23, 2024

விண்ணைத் தொடும்..!

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

விண்ணைத் தொடும்..!விண்ணைத் தொடும் அளவுக்கு உயரமான கட்டடங்கள் இந்தியாவில் பல உள்ளன. விண்ணைத் தொடும்..!

விண்ணைத் தொடும் அளவுக்கு உயரமான கட்டடங்கள் இந்தியாவில் பல உள்ளன.

அவற்றுள் பெரும்பாலானவை மும்பையில்தான் இருக்கின்றன.

இம்பீரியல்: இதன் உயரம் 396.2. மீட்டராகும். அதாவது 1,300 அடி. குடியிருப்பு மாடிகளின் எண்ணிக்கை 116 தளங்கள்.

த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட் டவர் பி.: இரண்டு கோபுரங்களுடன் விண்ணைத் தொடும் அளவுக்கு உள்ளது. இதன் உயரம் 372 மீட்டராகும். அதாவது 1,220 அடியாகும். குடியிருப்பு, ஓட்டல் மாடிகளின் தளங்களின் எண்ணிக்கை 85 ஆகும்.

பேலைஸ் ராயல்: இது கிரீன் பில்டிங் கவுன்சிலால் நாட்டின் முதல் உயரமான, வானாளவிய கட்டடமாகக் கௌரவிக்கப்பட்டது. இதன் உயரம் 320 மீட்டராகும். அதாவது 1,050 அடியாகும். குடியிருப்பு மாடிகளின் எண்ணிக்கை 56 தளங்களாகும்.

நமஸ்தே டவர்: வணிக வளாகம், ஓட்டல், குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட உயரமான கட்டடமாக இது விளங்குகிறது. 380 அறைகள் கொண்டது. இதன் உயரம் 310 மீட்டர். அதாவது 1,017 அடியாகும். குடியிருப்பு, வணிகம் சார்ந்தவை. 63 தளங்களைக் கொண்டவையாகும்.

லோகந்த்வாலா மினர்வா: இது ஒரே உயரம் கொண்ட இரண்டு உயரமான கோபுர அமைப்பைக் கொண்டவையாகும். மூன்று படுக்கைகள், நான்கு படுக்கைகள் கொண்ட வீடுகள் இங்குள்ளன. இந்தக் கட்டடத்தின் உயரம் 297 மீட்டராகும். அதாவது, 974 அடியாகும். ஒவ்வொரு கோபுரத்திலும் 90 தளங்கள் உள்ளன.

வேர்ல்டு வியூ: பரந்து விரிந்த கடல் பரப்பை ரசிக்கும் விதத்திலான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இதன் உயரம் 291 மீட்டராகும். அதாவது 955 அடியாகும். குடியிருப்பு மாடிகளின் எண்ணிக்கை 82 தளங்களாகும்.

இந்தியா புல்ஸ் ஸ்கை சூட்ஸ்: இந்தியா புல்ஸ் ஸ்கை, இந்தியா புல்ஸ் ஸ்கை டவர் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன. இதன் உயரம் 291 மீட்டராகும். அதாவது 955 அடியாகும். குடியிருப்பு, மாடிகளின் எண்ணிக்கை 75 தளங்களாகும்.

You may also like

© RajTamil Network – 2024