Monday, September 23, 2024

பழைய காகிதங்களில் கலை வடிவங்கள்

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

பழைய காகிதங்களில் கலை வடிவங்கள்பழைய காகிதங்களில் உருவான விலங்குகள்: சிவகாசி பள்ளியின் கலை அற்புதம்பழைய காகிதங்களில் கலை வடிவங்கள்

மதுரை மஹபூப்பாளையத்தில் இயங்கும் சிவகாசி நாடார் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நுழைந்தால், சிங்கம், புலி, மான், ஒட்டகச் சிவிங்கி போன்ற விலங்குகளும், மயில் போன்ற பறவைகளும் அவற்றின் உண்மையான உயரத்துடனும், பருமனுடன் இருப்பதைப் பார்க்கலாம். இவை பழைய காகிதங்களில் உருவான கலைவடிவங்கள்தான்.

இவற்றை உருவாக்கிய ஓவிய ஆசிரியர் ஜான் பிரிட்டோவிடம் பேசியபோது:

'விலங்குகள், பறவைகளின் உருவ அளவை அச்சு செய்து கான்கிரீட் கலவையை அதில் ஊற்றி இறுகச் செய்து உருவாக்கப்பட்டதல்ல; அச்சில் களிமண்ணை அடைத்து சுட்டு எடுக்கப்பட்டதும் அல்ல; முழுக்க, முழுக்க கைகளால் செய்யப்பட்டது. அதுவும் பழைய காகிதங்களைப் பயன்படுத்தி செய்யப்பட்டது.

காகிதக் கூழை அச்சுகளில் ஊற்றி உருவாக்கப்பட்டவை என்று நினைக்க வேண்டாம். முதலில் மூங்கில் குச்சிகளால் விலங்கின் வடிவமைப்பை உருவாக்குவோம். பிறகு காகிதங்களில் மைதா மாவு பசையைப் பூசி மூங்கில் குச்சி வடிவமைப்பின் மேல் ஓட்டுவோம். கண், காது, வாய், கால்கள் உருவாக்க, கொஞ்ச நேரம் பிடிக்கும். கைவிரல்களுக்கும் வேலை அதிகம் வேண்டிவரும்.

இதுதவிர, விலங்குகளின் உருவம் நமது உடல் அமைப்பு போலவே மேடு, பள்ளங்கள் இருக்கும். சில இடங்களில் ஒடுங்கியிருக்கும். அந்தப் பகுதிகளை அப்படியே காகிதத்தில் கொண்டு வர வேண்டும். புடைத்திருக்கும் வயிற்றுப் பகுதிக்கு அதிகமான காகிதங்கள் தேவைப்படும். காகிதங்களைக் குறைந்த பட்சம் மூன்று அடுக்குகள் ஓட்டுவோம். இறுதி அடுக்காக வெள்ளைத் தாளை ஓட்டுவோம். காகிதச் சிலை தயாரானதும் அதனைக் காய வைத்து மழை பெய்தால் காகிதம் நமத்துப் போகவிடாத தரமான வர்ணம் பூசுவோம்.

கான்கிரீட், களிமண்ணால் செய்தால் சிலை அதிகமான கனம் உள்ளதாக இருக்கும். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்த்த அல்லது கொண்டு போக அதிக நபர்களின் உடல் உழைப்பு தேவைப்

படும். இந்தக் காகிதச் சிலைகளை ஒருவரே தூக்கலாம். எடையும் மிகவும் குறைவு. பள்ளி கலைநிகழ்ச்சிகளில் வனப் பகுதி வருகிற மாதிரி காட்சி இருந்தால் இந்த விலங்குகளை மேடையில் பொருத்தமாக வைப்போம்.

தொடக்கத்தில் மாணவ, மாணவியர் மூங்கில் குச்சிகளால் விலங்கின் கட்டுமானத்தை சொல்லிக் கொடுத்து மாணவர்களை உருவாக்கச் சொல்வேன். அது சரிவர அமைந்துவிட்டால், காகிதங்களில் மைதா பசை தடவி மாணவர்கள் மூங்கில் குச்சிகளின் மீது ஓட்டுவார்கள்.

பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் இந்த விலங்குகள் சிலைக்காகப் பரிசு பெற்றுள்ளனர். தஞ்சாவூர் பெயிண்டிங், ஆயில் பெயிண்டிங், கிளாஸ் பெயிண்டிங், வால் பெயிண்டிங், வாட்டர் கலர், களிமண்ணில் சிலை செய்வது, 2டி, 3டி உருவக் கலையும் சொல்லிக் கொடுக்கிறேன். நலிந்த குடும்பத்தைச் சேர்ந்த கலையில் ஆர்வமுள்ள சிறார்களுக்கு மாலை நேரங்களில் இலவசமாகப் பயிற்சிகளை அளித்து வருகிறேன்.

இந்த ஆண்டு யானை சிலையை மாணவர்களைக் கொண்டு உருவாக்கப் போகிறேன். இதற்கான இட வசதியை பள்ளி நிர்வாகமும் பிரத்யேகமாகச் செய்து கொடுத்துள்ளது. ஒரு சிலையை வடிவமைக்க அதன் உருவ அமைப்பைப் பொறுத்து சில மாதங்கள் பிடிக்கும்'' என்கிறார் ஜான் பிரிட்டோ.

You may also like

© RajTamil Network – 2024