Monday, September 23, 2024

சீனாவை போல பாகிஸ்தானும் வளர்ச்சியடையும்: பாக். பிரதமர் நம்பிக்கை!

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

சீனாவை போல பாகிஸ்தானும் வளர்ச்சியடையும்: பாக். பிரதமர் நம்பிக்கை! சீனாவுடன் புது சகாப்தம் உதயம்: பாக். பிரதமர் புகழாரம்!சீனாவை போல பாகிஸ்தானும் வளர்ச்சியடையும்: பாக். பிரதமர் நம்பிக்கை!படம் | ஏபி

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே தகவல் தொழில்நுட்பம், தகவல்தொடர்பு, சுரங்கம், எரிசக்தி துறைகளில் இரு நாடுகளுக்குமிடையே கூட்டாண்மையின் புது சகாப்தம் உதயமாகியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷரீஃப் தெரிவித்துள்ளார்.

இரு தரப்புக்கும் இடையேயான உறவுகளை ஆழப்படுத்தவும் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த உறவு வழிவகுக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் பிரதமராக கடந்த மார்ச் மாதம் பதவியேற்றபின், ஷேபாஸ் ஷரீஃப் முதன்முறையாக சீனாவுக்கு அரசுமுறை பயணமாக கடந்த மாதம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தங்களை அமல்படுத்துவது குறித்து சனிக்கிழமை(ஜூலை 6) இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார் ஷேபாஸ் ஷரீஃப்.

அப்போது அவர் பேசியதாவது, பாகிஸ்தானின் கடினமான தருணங்களில் சீனா எப்போதும் துணை நின்று ஆதரவளித்து வருவதாக பாராட்டியுள்ளார். உலகளவில் சீனா வலுவான பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது. அதே பாணியில் பாகிஸ்தானும் வளர்ச்சியடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சீன தொழில் நிறுவனங்கள் சில, சுமார் 5 – 8 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை பாகிஸ்தானில் மேற்கொள்ள முனைப்பு காட்டி வருவதாகவும், நிகழாண்டில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள உணவு மற்றும் வேளாண்மை கண்காட்சியில் சீனாவை சேர்ந்த 12 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு சென்று வேளாண் துறையில் அதிநவீன பயிற்சிகளை மேற்கொள்ள பாகிஸ்தானை சேர்ந்த 1,000 மாணவர்களை அனுப்பி வைப்பதற்கான முயற்சிள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் தகவல்தொடர்பு, உள்கட்டமைப்பு மற்றும் மின்சார உற்பத்தி திட்டங்களில் சீனா முன்னெடுத்துள்ள மேம்பாட்டுப் பணிகளை வெகுவாகப் பாராட்டியுள்ள அவர், 100க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் பாகிஸ்தான் நிறுவனங்களுடன் தொழில் முதலீடுகள் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், சீன முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பாகிஸ்தான் அரசு அமைத்து தருமென உறுதியளித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024