Monday, September 23, 2024

போலீசாரால் தீர்க்க முடியாத பஞ்சாயத்தை தீர்த்த எருமை

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம், பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள அஷ்கரன்பூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் நந்தலால். விவசாயியான இவர் சொந்தமாக மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற இவரது எருமை மாடு ஒன்று வீடு திரும்பவில்லை.

3 நாட்களாக மாட்டை தேடி அலைந்துள்ள இவர் கடைசியாக பக்கத்து கிராமமான புரேரி ஹரிகேஷில் தன்னுடைய எருமை மாடு இருப்பதைக் கண்டறிந்துள்ளார். மாடு கிடைத்த மகிழ்ச்சியில் அவர் மாட்டை அழைத்து செல்ல முயன்றார்.

திடீரென ஹனுமான் சரோஜ் என்பவர் அந்த எருமை மாடு தன்னுடையது என்று மாட்டை தர மறுத்துள்ளார். வேறு வழி இல்லாத நந்தலால், ஹனுமான் சரோஜ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து, போலீசார் இரு தரப்பையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இருவருமே மாடு தன்னுடையது என கூறியதால் இதற்கு தீர்வு காண போலீசார் புதிய திட்டம் ஒன்றை தீட்டினர்

இருவரையும் அழைத்து அவர்கள் கிராமத்திற்கு செல்லும் பாதையில் நிறுத்தினார். எருமை மாடு யார் பின்னல் வருகிறதோ அவரே மாட்டின் உரிமையாளர் என கூறி மாட்டை நடு ரோட்டில் அவிழ்த்து விட்டார்கள். அந்த எருமை மாடு நந்தலால் பின்னல் சென்றது. எனவே மாடு அவருக்கே சொந்தம் என மாட்டை அவருடன் அனுப்பி வைத்தனர். ஒருவழியாக இந்த பஞ்சாயத்துசுமுகமாக முடிந்ததாக போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

You may also like

© RajTamil Network – 2024