Monday, September 23, 2024

சங்கீத் கொண்டாட்டம்… கலைநிகழ்ச்சியால் கவர்ந்த ஜஸ்டின் பெய்பர்..

by rajtamil
0 comment 26 views
A+A-
Reset

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் சங்கீத் கொண்டாட்டம்… அரங்கை அதிரவைத்த ஜஸ்டின் பெய்பர்…ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் உடன் ஜஸ்டின் பெய்பர்

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் உடன் ஜஸ்டின் பெய்பர்

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் சங்கீத் கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பெய்பர் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்தார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது
திருமணத்தையொட்டி சங்கீத் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சர்வதேச அளவில் பிரபல பாடகராக இருக்கும் ஜஸ்டின் பெய்பர் சங்கீத் கொண்டாட்டத்தில் கடந்த 5 ஆம் தேதி கலந்து கொண்டு அரங்கை அதிர வைத்தார்.
ஜஸ்டின் பெய்பரின் கலை நிகழ்ச்சிகளை ஏராளமான விஐபிக்கள் நேரில் கண்டு களித்து மெய்சிலிர்த்து போனார்கள்.
புத்தம் புது பாடல்களை ஜஸ்டின் பெய்பர் பாட, அவருடன் இணைந்த ஏராளமான விருந்தினர்களும் மேடையில் சென்று ஆடியது பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
ஜஸ்டின் பெய்பருடன் மேடையில் ஆட பல பிரபலங்கள் ஆர்வம் காட்டினர்.
ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்டின் திருமண கொண்டாட்டங்களுக்கு ஜஸ்டின் பெய்பரின் கலை நிகழ்ச்சி கூடுதல் உற்சாகத்தை சேர்த்துள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS

You may also like

© RajTamil Network – 2024