Sunday, September 22, 2024

ஜிம்பாப்வே டி20 தொடர்: தாயகம் திரும்பும் 3 இந்திய வீரர்கள்…காரணம் என்ன..?

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

இந்தியா – ஜிம்பாப்வே இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த தொடரில் டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

ஆனால், டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் இரு போட்டிகளுக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோருக்கு பதிலாக சாய் சுதர்சன், ஜித்தேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

அதில் முதல் போட்டியில் அணியில் விளையாடும் வாய்ப்பை பெறாத சாய் சுதர்சனுக்கு 2-வது போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அந்தப் போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் முதல் 2 டி20 போட்டிகளில் மட்டுமே அணிக்கு தேர்வாகியிருந்த சாய் சுதர்சன், ஜித்தேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தாயகம் திரும்ப உள்ளனர். ஏனெனில் கடைசி 3 போட்டிகளுக்கான இந்திய அணியில் அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

You may also like

© RajTamil Network – 2024