பாட்மிண்டனைக் காட்டிலும் டென்னிஸில் சிறப்பாக செயல்பட்டிருப்பேன்; மனம் திறந்த சாய்னா நேவால்!

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

பாட்மிண்டனைக் காட்டிலும் டென்னிஸில் சிறப்பாக செயல்பட்டிருப்பேன்; மனம் திறந்த சாய்னா நேவால்!பாட்மிண்டனைக் காட்டிலும் டென்னிஸில் சிறப்பாக செயல்பட்டிருப்பேன் என பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பேசியுள்ளார்.சாய்னா நேவால் (கோப்புப் படம்)சாய்னா நேவால் (கோப்புப் படம்)

பாட்மிண்டனைக் காட்டிலும் டென்னிஸில் சிறப்பாக செயல்பட்டிருப்பேன் என பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பேசியுள்ளார்.

பாட்மிண்டனில் சாய்னா நேவால் பல சாதனைகளைப் படைத்துள்ளார். உலக பாட்மிண்டன் தவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை மட்டுமல்லாது, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் அவரையேச் சேரும்.

லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நேவால், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கத்தினையும் வென்றுள்ளார்.

இந்த நிலையில், பாட்மிண்டனைக் காட்டிலும் டென்னிஸில் சிறப்பாக செயல்பட்டிருப்பேன் என பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற “ஹெர் ஸ்டோரி மை ஸ்டோரி” என்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: என்னுடைய பெற்றோர் என்னை பாட்மிண்டனில் சேர்த்துவிடாமல் டென்னிஸில் சேர்த்துவிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நில நேரங்களில் நினைத்திருக்கிறேன். பாட்மிண்டனைக் காட்டிலும் டென்னிஸில் அதிக பணம் கிடைக்கிறது. என்னிடம் அதிக சக்தியும் இருந்தது. பாட்மிண்டனைக் காட்டிலும் டென்னிஸில் நான் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருப்பேன். பாட்மிண்டனை தேர்ந்தெடுத்தபோது, ரோல் மாடலாக எடுத்துக் கொள்வதற்கு யாருமில்லை. நான் பாட்மிண்டனில் உலகின் நம்பர்.1 வீராங்கனையாக மாறுவேன். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் என எனக்கு முன்பாக யாரும் கூறவில்லை.

விளையாட்டில் கவனம் செலுத்துங்கள் என்று குழந்தைகளிடம் எப்போதும் கூறுவேன். சீனா 60-70 பதக்கங்களை வெல்கிறது. நாம் 3-4 பதக்கங்களை மட்டுமே வெல்கிறோம். நமது நாட்டில் அதிக அளவில் மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெயர்களெல்லாம் செய்தித்தாள்களில் வருவதில்லை. குழந்தைகள் அதிலும் குறிப்பாக பெண்கள் விளையாட்டில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். தற்போது குழந்தைகளுக்காக நாங்கள் இருக்கிறோம். உலக அளவில் முதலிடம் பிடித்தவர்கள், ஒலிம்பிக் சாம்பியன்ஸ், பதக்கங்களை வென்ற பலரும் இருக்கின்றனர். கடினமாக உழைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

நான் மிகவும் திறமைவாய்ந்த நபராக இருக்கவில்லை. நிறைய பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. திறமைவாய்ந்த ஒருவர் ஒரு விஷயத்தை 100 முறை செய்தால், அதனை நான் 1000 முறை செய்ய வேண்டியிருந்தது. ஆனால், எனக்கு கடின உழைப்பு பிடிக்கும். என்னுடைய விடாமுயற்சி எனது பயிற்சியாளர்களுக்கும் பிடிக்கும் என்றார்.

You may also like

© RajTamil Network – 2024