திருப்பதி கோயிலில் பிராங்க் வீடியோ – புது சர்ச்சையில் டிடிஎஃப் வாசன்

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிராங்க் வீடியோ… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்! – என்ன நடந்தது?திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிராங்க் வீடியோ

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிராங்க் வீடியோ

டிடிஎப் வாசனும், அவரது நண்பர்களும் திருப்பதி பக்தர்களை ஏமாற்றி வெளியிட்ட பிராங்க் வீடியோ எடுத்தது தற்போது சர்ச்சையாகி உள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, மணிக்கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம் பெற்று செல்கின்றனர். தற்போது வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 32 அறைகளிலும் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், யூடியூபர் டிடிஎப் வாசனும் அவரது நண்பர்களும் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களிடம்தான் ப்ராங்க் வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர். சர்ச்சைகளுக்கு பெயர்போன டிடிஎப் வாசன், அவருடைய நண்பர் அஜீஸ் உட்பட சிலர் சேர்ந்து திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு ஏழுமலையான் தரிசனத்திற்காக வைகுண்ட மண்டபத்தில் இருந்த பக்தர்கள் எப்போது நமக்கு ஏழுமலையான வழிபட வாய்ப்பு கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் நீண்ட நேரம் காத்திருந்துள்ளனர்.

விளம்பரம்

அப்போது அறையின் கதவை திறந்து விடும், தேவஸ்தான ஊழியர் போல அஜீஸ் சென்று, காத்திருப்பு அறையின் கதவு பூட்டை திறந்து விடுவதுபோல பாவலா செய்கிறார். உடனே, ஏழுமலையானை வழிபட நமக்கு நேரம் வந்துவிட்டது என்ற ஆனந்த களிப்பில் பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா!! என்று கோஷம் எழுப்புகின்றனர். ஆனால் கதவுகள் திறக்கப்படாமல் இருக்க, நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து வேதனையில் மீண்டும் அமருகின்றனர்.

இதையும் படிங்க : இந்திய நிர்வாகத்துறை வரலாற்றில் முதன்முறை… பாலினத்தை மாற்றிய சிவில் சர்வீஸ் அதிகாரி!

விளம்பரம்

அப்போது அவர்களை ஏமாற்றிய அஜீஸ் அங்கிருந்து சிரித்துக் கொண்டே ஓடுகிறார். இவற்றை வீடியோ எடுத்து tirupathi Funny video என்ற பெயரில் இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டு இருக்கிறார் டிடிஎப் வாசன். திருப்பதி மலையை அடையும் பக்தர்கள் அனைவரும் எங்களுடைய தேவஸ்தான பக்தர்கள். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பது எங்களுடைய முழு கடமை. பக்தர்களை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது, அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்பது தேவஸ்தானத்தின் அடிப்படை கொள்கை.

இந்த நிலையில் சாமி தரிசனத்திற்காக மணி கணக்கில் காத்திருந்த பக்தர்களை ஏமாற்றி Funny video வெளியிட்ட டிடிஎஃப் வாசன் மற்றும் அஜீஸ் மீது தேவஸ்தான நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். மேலும் பலமான பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி கோவிலுக்குள் செல்போன் எடுத்து சென்றது எப்படி? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விளம்பரம்

திருப்பதியில் இதற்கு முன் செல்போனை தன்னுடைய உடலில் மறைத்து ஏழுமலையான் கோவில் உட்பகுதி வரை எடுத்துச் சென்று வீடியோ பதிவு செய்தார் ஒரு ஆந்திர பக்தர். அவரை தேவஸ்தான நிர்வாகம் கடுமையாக தண்டித்து போலீசில் ஒப்படைத்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது. வைகுண்ட காத்திருப்பு மண்டபத்தில் ப்ராங்க் வீடியோ எடுத்த டிடிஎப் வாசன், அஜீஸ் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடிய குடியரசு தலைவர்.. வைரலாகும் வீடியோ!

விளம்பரம்

இவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் என்றும் ஏழுமலையான் பக்தர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பதி கோவிலில் பக்தர்களை ஏமாற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட டிடிஎப் வாசனுக்கு எதிராக நெட்டிசன்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பக்தர்களை ஏமாற்றிய அஜீஸ், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மேலும் ஒரு வீடியோவை வெளியிட, அதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. டிடிஎப் வாசன், அஜீஸ் மற்றும் அவரது நண்பர்கள் செய்த செயலை நெட்டிசன்கள் கடுமையான வார்த்தைகளால் கண்டித்துள்ளனர். Funny video எடுப்பதற்கும், பிராங்க் செய்வதற்கும் திருப்பதி கோவிலும், திருப்பதி மலையும் இடமில்லை. அவை பக்திக்குரிய இடம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Crime News
,
Tirumala Tirupati
,
TTF Vasan

You may also like

© RajTamil Network – 2024