சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடிய குடியரசு தலைவர்.!

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடிய குடியரசு தலைவர்.. வைரலாகும் வீடியோ!திரௌபதி முர்மு

திரௌபதி முர்மு

சாய்னா நேவாலுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேட்மிண்டன் விளையாடி அசத்தினார்.

பத்ம விருது பெற்றவர்களுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துரையாடும் நிகழ்ச்சி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பத்ம விருது பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் உரையாற்ற உள்ளார். இதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் சாய்னா நேவால் நேற்றிரவு தங்கினார்.

#JUSITN
சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடிய குடியரசு தலைவர்.. #PresidentDroupadiMurmu#SainaNehwal#Badminton#News18tamilnadu | https://t.co/uk2cvptedPpic.twitter.com/t5Ln3mNirW

— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 11, 2024

விளம்பரம்

அப்போது, குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மைதானத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடி மகிழ்ந்தார். பேட்மிண்டன் விளையாட்டின் மையமாக இந்தியா உருவெடுக்க ஊக்கமளிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் இந்த செயல் அமைந்துள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Draupadi Murmu
,
Saina Nehwal

You may also like

© RajTamil Network – 2024