இந்தியாவில் ரயிலின் உரிமையாளராக இருந்த விவசாயி.. வியப்பூட்டும் சம்பவம்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

இந்தியாவில் ரயிலின் உரிமையாளராக இருந்த விவசாயி… வியப்பூட்டும் இந்த சம்பவம் பற்றி உங்களுக்கு தெரியுமா?இந்தியன் ரயில்வே

இந்தியன் ரயில்வே

இந்தியாவில் ரயிலின் உரிமையாளராக ஒரு விவசாயி இருந்துள்ளார். இந்திய வரலாற்றில் மிகவும் அரிதாக நடந்த சம்பவம் குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் ஏராளமான பணக்காரர்கள் இருந்தாலும் அவர்களுக்கு சொந்தமாக ரயில் ஏதும் கிடையாது. இந்தியாவின் சட்டப்படி யாரும் ரயிலை சொந்தமாக்கிக் கொள்ள முடியாது. ஆனால் விவசாயி ஒருவர் இந்திய ரயிலின் உரிமையாளராக சிறிது காலம் இருந்தார் என்பது பலரும் அறியாத விஷயமாகும். பஞ்சாப்பை சேர்ந்த அந்த விவசாயி முழு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் உரிமையாளராக சிறிது காலம் இருந்தார்.

விளம்பரம்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கட்டனா கிராமத்தில் வசிப்பவர் சம்பூரன் சிங். ஒரு நாள் திடீரென்று டெல்லிக்கும் அமிர்தசரஸுக்கும் இடையே ஓடும் கோல்டன் சதாப்தி எக்ஸ்பிரஸின் உரிமையாளரானார். லூதியானா-சண்டிகர் ரயில் பாதையை அமைப்பதற்காக சம்பூரன் சிங் உட்பட பல விவசாயிகளின் நிலங்களை ரயில்வே வாங்கிய 2007 ஆம் ஆண்டு இந்த சம்பவத்திற்கான அடித்தளம் போடப்பட்டது.

இதற்காக, ஒவ்வொரு ஏக்கருக்கும், 25 லட்சம் ரூபாய் வழங்க ரயில்வே முடிவு செய்தது, ஆனால், கட்டனாவுக்கு அருகிலுள்ள கிராமத்தின் நிலத்திற்கு, ஒவ்வொரு ஏக்கருக்கும், 71 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த பாகுபாட்டை எதிர்த்து சம்பூரன் சிங் நீதிமன்றம் சென்றார். முதலில் இழப்பீட்டுத் தொகையை ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாகவும், பின்னர் ரூ.1.5 கோடிக்கும் அதிகமாக நீதிமன்றம் உயர்த்தியது.

விளம்பரம்

2015 ஆம் ஆண்டிற்குள் விவசாயி சம்பூரன் சிங்கிடம் பணம் செலுத்துமாறு வடக்கு ரயில்வேக்கு உத்தரவிடப்பட்டது, அதை ரயில்வேயால் செய்ய முடியவில்லை. பின்னர் 2017 ஆம் ஆண்டில், லூதியானாவில் உள்ள ரயில் நிலைய மாஸ்டர் அலுவலகத்தை வழக்குடன் இணைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் சம்பூரன் ரயிலின் முழு உரிமையாளரானார். அவரும் ரயிலை ஜப்தி செய்ய வழக்கறிஞர்களுடன் ஸ்டேஷனுக்கு வந்தார்.

இதையும் படிங்க – ஷூவிற்குள் ஒளிந்து படம் எடுத்த விஷப்பாம்பு – வைரலாகும் புகைப்படம்…விளம்பரம்

ஆனால் ரயில்வே நிர்வாகம் புத்திசாலித்தனமாக செயல்பட்டு மேல்முறையீடு செய்து, இந்த உத்தரவை நிறுத்தியது. இதன் அடிப்படையில் சம்பூரன் சிங் ரயிலின் உரிமையாளராக 5 நிமிடங்கள் நீடித்தார்.

இந்திய வரலாற்றில் இப்படியொரு சம்பவம் வேறு யாருக்கும் நடைபெறவில்லை. இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க – உலகிலேயே சிறந்ததாக அறிவிக்கப்பட்ட இந்திய அரிசி… எது தெரியுமா?

ஆனால் ரயிலின் உரிமையாளர் என்கிற அடிப்படையில் அரசுக்கு அடுத்ததாக விவசாயி சம்பூரன் சிங் வரலாற்றில் இடம்பிடித்து விட்டார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Indian Railways

You may also like

© RajTamil Network – 2024