பருவம் தவறிய மழையால் உருவாகும் புதிய ஆபத்து… அதிர்ச்சியில் மக்கள்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

பருவம் தவறிய மழையால் உருவாகும் புதிய ஆபத்து… அதிர்ச்சியில் உத்தரப்பிரதேச மக்கள்… என்ன நடந்தது?மலேரியா

மலேரியா

தற்போது காலம் தவறி பெய்யும் மழை அதிகமாகிவிட்டது. அதனால் இந்த காலத்திலும் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். கொசுக்கள் நம் இரத்தத்தை குடித்து, நோயைக் கொடுத்த பிறகு பூச்சிக்கொல்லி தெளித்து என்ன பயன்? என்று பதினெட்டு வயதான சீதா தேவி, தன் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சீதா தேவியின் 60 வயதுடைய மாமியார் குலாபி தேவி மற்றும் 34 வயதுடைய மைத்துனர் சோனு தேவி ஆகியோர் கடுமையான காய்ச்சல், சளி மற்றும் கடுமையான உடல் வலி ஆகியவற்றுடன் பதினைந்து நாட்களுக்கும் மேலாக போராடி வந்தனர்.

விளம்பரம்

உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ராபர்ட்ஸ்கஞ்சிலிருந்து 64 கி.மீ. தொலைவில் உள்ள செந்தூர் கிராமத்தில் சீதா தேவி வசித்து வருகிறார். இங்குள்ள கிராமங்களை இணைக்கும் வகையில் பொது போக்குவரத்து சேவை எதுவும் இல்லை, இதனால் பேருந்து சேவை இயங்கும் பிரதான சாலையை அடைய கிராம மக்கள் 6-12 கி.மீ. தூரம் நடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

“பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் எதிர்பாராத மழைக்குப் பிறகு, எல்லா இடங்களிலும் கொசுக்கள் பரவி உள்ளன. இதன் காரணமாக நாங்கள் கொசுவால் கடிக்கப்பட்டு நோய்வாய்ப்படுகிறோம். என்னால் ஒரு இடத்திற்கு சென்று தண்ணீர் எடுக்கவோ அல்லது வீட்டு வேலைகளை செய்யவோ முடியவில்லை. அந்தளவுக்கு கொசுக்களின் தொல்லை இங்கு அதிகரித்துள்ளது” என்று சோனு தேவி கூறியுள்ளார். 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள அனைத்து மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசம் ஐந்தில் ஒரு பகுதியையும், அதைத் தொடர்ந்து சத்தீஸ்கர் (18.3%) உள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
Demonetization : 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு…? ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு வைத்த முக்கிய கோரிக்கை!

கடந்த 2020ஆம் ஆண்டில், ஒடிசா (41,739), சத்தீஸ்கர் (36,667) மற்றும் உத்தரப் பிரதேசம் (28,668) ஆகிய மாநிலங்களில் நாட்டிலேயே அதிகமாக மலேரியா பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக மே 17ம் தேதி வெளியிட்ட பதிலில் NCVBDC சுட்டிக்காட்டியுள்ளது. இதனையடுத்து அடுத்த இரண்டு ஆண்டுகளில், குறைவான நபர்கள் பாதிக்கப்பட்டதாக உத்தரப்பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 2021இல் 10,792 ஆகவும் மற்றும் 2022இல் 7,039 ஆகவும் இருந்தன. 2017இல் 2.01%லிருந்து 2018இல் 2.32% ஆக இருந்தது. மேலும் 2021இல் 1.8%ஆகவும், 2023இல் 4.5%ஆகவும் இருந்தது.

விளம்பரம்

அனோபிலிஸ் கொசு கடித்த 10 முதல் 14 நாட்களுக்குப் பிறகு மனிதர்களுக்கு மலேரியா ஏற்படுகிறது. NCVBDC ஆய்வின்படி , இந்தியாவில் மலேரியா பிளாஸ்மோடியம் விவாக்ஸ் மற்றும் பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் ஆகியவற்றால் ஏற்படுகின்றன. மலேரியா நோய் காணப்பட்டதும் 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் மலேரியா கடுமையான நோயாக மாறி, மரணத்திற்கு வழிவகுக்கிறது. மலேரியாவை உண்டாக்கும் அனாபிலிஸ் கொசுக்கள், குளங்கள் மற்றும் குட்டைகள் போன்ற நீரில் தேங்கி இனப்பெருக்கம் செய்கின்றன.

விளம்பரம்

இதையும் படிக்க: சமையல் எரிவாயு சிலிண்டர் – ஆதார் எண் இணைப்பு : மத்திய அமைச்சர் கொடுத்த ஹேப்பி நியூஸ்

சோன்பத்ரா மாவட்டம் கொசுக்களால் தான் நிறைந்துள்ளது. மழைநீர் தேங்கிய குழிகள் பல மாதங்களாக அப்படியே இருக்கின்றன. இது அனாபிலிஸ் கொசுக்களுக்கு இனப்பெருக்கத்தை அதிகரிக்கச் செய்கின்றன. இங்குள்ள ஒவ்வொரு பகுதியிலும் 50 முதல் 60 வரையிலான சிறிய மற்றும் பெரிய அணைகள் உள்ளன, மேலும், குழிகளும், சிற்றோடைகளும் உள்ளன என்று சோன்பத்ராவின் மாவட்டத் தொற்று நோய் ஆலோசகர் ஷுபம் சிங் கூறியுள்ளார்.

விளம்பரம்
nw_webstory_embed
மேலும் செய்திகள்…

இந்த ஆண்டு சோன்பத்ரா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் அதிக மழை பெய்தது. சராசரியாக அங்கு வெப்பநிலை 20-22 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது. இந்நிலையில் மார்ச் மாதத்திலும், இந்த மாவட்டம் 24-26 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அலையுடன், அதிகபடியான மழையம் பெய்தது. பெரும்பாலான அனோபிலிஸ் கொசுக்கள் 20-30 டிகிரி செல்சியஸ் வெப்பத்திற்குள் உருவாகின்றன, இதனால் அந்த இரண்டு மாதங்களும் இனப்பெருக்கத்திற்கு சாதகமான மாதங்களாக இருந்தது. எனவே இந்த பகுதிகளில் அதிகப்படியான கொசுக்கள் உற்பத்தியாகி மனிதர்கள் நோய்வாய்ப்படுகின்றனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Heavy rain
,
Malaria
,
mosquito
,
uttar pradesh

You may also like

© RajTamil Network – 2024