“AI தொழில்நுட்பத்தால் முக்கிய மாற்றம் வரப்போகிறது” – முகேஷ் அம்பானி

Reliance AGM 2024: “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வெற்றிகரமான மாற்றம் வரப்போகிறது” – முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளுக்கான போனஸ் குறித்து செப்டம்பர் 5இல் பரிசீலனை செய்யப்படும் என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

2024 பொதுத் தேர்தல் இந்தியாவின் நற்பெயரை உலகளவில் உயர்த்தியுள்ளதாக ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்துடைய வருடாந்திர பொதுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. மும்பையில் நடைபெற்று வரும் இந்த பொதுக் கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள், பங்குதாரர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த வருடாந்திர பொதுக் கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று என்ன மாதிரியான அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பில் இந்திய வர்த்தக உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது.

விளம்பரம்

இந்நிலையில் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளவர்களை வரவேற்று ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வரவேற்பு உரையாற்றினார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

எனது அன்பான பங்குதாரர்களே, வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு உங்களை வரவேற்கிறேன். தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன்.

2024 பொதுத் தேர்தல் இந்தியாவின் துடிப்பான ஜனநாயகத்திற்கு அற்புதமான வெற்றியை கொடுத்துள்ளது. இந்த தேர்தல் உலகளவில் இந்தியாவின் நற்பெயரை உயர்த்தியுள்ளது.

மேலும் இந்த தேர்தல் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை நமக்கு அளிக்கிறது. இப்போது உலகப் பொருளாதாரம் பற்றிய சில சுருக்கமான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இன்றைய உலகம் நம்பிக்கையையும் கவலையையும் தருகிறது.

விளம்பரம்இதையும் படிங்க – உக்ரைன் பயணம், வங்கதேச நிலவரம் தொடர்பாக அதிபர் பைடனுடன் பிரதமர் மோடி பேச்சு

ஒருபுறம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புரட்சிகரமான முன்னேற்றங்களுடன், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, கணினி, ரோபாட்டிக்ஸ் மற்றும் வாழ்க்கை அறிவியல் ஆகியவற்றில் நாம் சிறந்த காலங்களில் வாழ்கிறோம். மனிதகுலம் அனைவருக்கும் முன்னோடியில்லாத செழிப்பு மற்றும் நல்வாழ்வின் எதிர்காலத்தை அவர்கள் உறுதியளிக்கிறார்கள்.

AI இன் வளர்ச்சி, மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் மிகவும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். மனிதகுலம் எதிர்கொள்ளும் பல சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான வாய்ப்புகளைத் திறந்துள்ளது.“என்று கூறியுள்ளார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
mukesh ambani
,
Reliance AGM 2024

Related posts

Indian Army is developing indigenous Sensor Fuzed Munitions

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்