102
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள சத்தியகிரீஸ்வரர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிபாடு நடத்தினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி., மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று வழிபாடு நடத்தினார். அங்கிருந்து வாரணாசியில் இருந்து திருச்சி வந்தார். அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் வந்தடைந்தார். அங்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகள் வரவேற்றனர்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக திருமயம் சத்தியகிரீஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தினார். இதனைத் தொடர்ந்து கோட்டை பைரவர் கோவிலுக்கும் சென்று வழிபாடு நடத்த உள்ளார். அமித்ஷா வருகையை முன்னிட்டு, அவர் செல்லும் வழித்தடங்கள் மற்றும் கோயில்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.