Wednesday, September 25, 2024

‘IC 814’ Hijack வெப் சீரிஸ் விவகாரம் : நெட்பிளிக்ஸ் நிறுவனம் விளக்கம்

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

“உண்மையான பெயர் சேர்க்கப்படும்” – இந்திய ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் நெட்பிளிக்ஸ் நிறுவனம் உறுதி"உண்மையான பெயர் சேர்க்கப்படும்" - இந்திய ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் நெட்பிளிக்ஸ் நிறுவனம் உறுதி

IC – 814 – THE KANDAHAR HIJACK என்ற வலைதள தொடர் சர்ச்சை தொடர்பாக நெட்பிளிக்ஸ் அதிகாரிகள் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் விளக்கம் அளித்துள்ளனர்.

1999ஆம் ஆண்டு நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டெல்லிக்கு வந்த இந்திய விமானத்தை கடத்திய பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள், அதனை காந்தஹார் விமான நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அதில் இருந்த பயணிகளை பிணையக் கைதிகளாக வைத்து, இந்தியா வசம் இருந்த மசூத் அசார் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளை விடுவிக்க நிபந்தனை விதித்தனர். அதன் பேரில் 3 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து இந்திய விமானம் விடுவிக்கப்பட்டது.

விளம்பரம்

Also Read:
பாம்புகள் இப்படிதான் கால்களை இழந்ததா?… விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

இந்த சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட IC 814 வெப் தொடரில், தீவிரவாதிகள் கதாபாத்திரத்திற்கு இந்துப் பெயர் வைக்கப்பட்ட சம்பவம் விமர்சனங்களுக்கு வித்திட்டது. இதுதொடர்பாக நெட்பிளிக்ஸ்-க்கு எதிராகவும், வெப் தொடருக்கு எதிராகவும் இணையத்தில் பலரும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நெட்ஃபிளிக்ஸ் இந்திய உள்ளடக்க தலைவர் மோனிகா ஜெர்கில்-க்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விளம்பரம்

நெட்பிளிக்ஸ் விளக்கம்

இதுதொடர்பாக பதில் அளிக்க நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவு நிர்வாகி மோனிகா ஷெர்கிலுக்கு தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அளித்தது இதையடுத்து நெட்பிளிக்ஸ் நிர்வாகிகள் இருவர், ஒலிபரப்புத்துறை அமைச்சக அதிகாரிகளை செவ்வாய்க்கிழமை சந்தித்து விளக்கமளித்தனர்.

மேலும் வலைதள தொடரின் தொடக்கத்தில் பொறுப்பு துறப்பு என்ற பகுதியில் பயங்கரவாதிகளின் உண்மையான பெயர் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு இந்த விளக்கத்தை நெட்பிளிக்ஸ் குழு அளித்துள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
central government
,
Web series

You may also like

© RajTamil Network – 2024