Wednesday, September 25, 2024

ISRO | விமான பயணத்தில் விரைவில் இணையதள சேவை: இஸ்ரோ குட் நியூஸ்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

ISRO | விமான பயணத்தில் விரைவில் இணையதள சேவை : இஸ்ரோ குட் நியூஸ்!ISRO | விமான பயணத்தில் விரைவில் இணையதள சேவை : இஸ்ரோ குட் நியூஸ்!

இந்தியாவில் விமான பயணத்தின்போது இணையதள சேவையை பயன்படுத்துவற்கான முயற்சியில் இஸ்ரோ இறங்கி உள்ளது.

இந்தியாவில் விமான பயணத்தின்போது இணையதளத்தை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. ஏனென்றால், விமான நிலையங்களில் இருந்து விமானிகளுக்கு கிடைக்க வேண்டிய தகவல்கள் தடைப்படும் என்பதால் இந்த வசதி இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில், இந்திய விமானங்களில் இணைய இணைப்பை பெற சில ஆண்டுகளுக்கு முன்பு விமானங்களை அனுமதித்தது.

இதையடுத்து, இந்தாண்டு இறுதிக்குள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இதுதொடர்பான செயற்கைகோளை விண்ணில் ஏவப்பட உள்ளது. இது வெற்றியடைந்தால் அதன் மிக உயர் தொழில்நுட்ப செயற்கைகோள் ‘ஜிசாட்-20’ துணையுடன் விமானத்தில் இணையதள சேவை சாத்தியம் ஆகும்.

விளம்பரம்

Also Read:
TNPSC Group 2 | டி.என்.பி.எஸ்.சி. குரூப் – 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

இஸ்ரோவின் கீழ் செயல்படும்,பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கை கோள் மையத்தால் இந்த உயர் செயல்திறன் செயற்கை கோள் உருவாக்கப்படுகிறது. இந்த உயர் செயல்திறன் செயற்கைகோள் என்பது பாரம்பரிய செயற்கை கோள்களை விட அதிக கிதத்தில் தரவை அனுப்பும் தகவல் தொடர்பு செயற்கைகோளாகும்.

விரைவில் இணையதள சேவை

செயற்கை கோள் அடிப்படையிலான இணைய இணைப்பை வழங்குவது மட்டுமின்றி, ஐந்தில் ஒரு பங்கு திறனில் விமானத்தில் இணையதள சேவையையும் வழங்க ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், விரைவில் விமான பயணத்தில் இணையதள சேவை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Flight
,
internet
,
ISRO

You may also like

© RajTamil Network – 2024