மக்களவைத் தேர்தலில் மாஸ் காட்டிய சீமான்.. தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறும் நாதக

by rajtamil
Published: Updated: 0 comment 59 views
A+A-
Reset

நாட்டின் 18-வது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்தது. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மேலும் ஆந்திராவின் 175 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒடிசாவின் 147 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.

இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 292 இடங்களை மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றியது. எனினும், பாஜகவால் 272 என்ற தனிப்பெரும்பான்மை எண்ணிக்கையை பெறமுடியவில்லை. அந்தவகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக மட்டும 240 தொகுதிகளை வசப்படுத்தியுள்ளது. இதனால் கூட்டணி அமைத்தே ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மொத்தம் 8.19% வாக்குகளை பெற்றுள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில், 8.19% வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெறும் 6.58% வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், இந்தமுறை 8% மேல் வாக்குகளை பெற்றுள்ளது. அதுமட்டுமன்றி 12 மக்களவைத் தொகுதிகளில் 1 லட்சத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024