Sunday, September 22, 2024

NDA கூட்டணி மட்டும் தான் – பவன் கல்யாண் உறுதி

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

NDA கூட்டணி மட்டும் தான்.. வேறு எந்த எண்ணமும் இல்லை – பவன் கல்யாண் உறுதிபவன் கல்யாண்

பவன் கல்யாண்

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடருவதைத் தவிர வேறு எண்ணம் எதுவும் இல்லை என்று ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து ஆந்திராவில் போட்டியிட்ட பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ளது. ஆந்திராவில் அவரது கட்சி போட்டியிட்ட 21 சட்டமன்றத் தொகுதிகளிலும், 2 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றியை வசப்படுத்தியுள்ளது.

அத்துடன் பிதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பவன் கல்யாணும் முதன்முறையாக வெற்றிபெற்றார். இதையடுத்து, நியூஸ் 18 குழுமத்திற்கு பிரத்யேக நேர்காணல் அளித்த அவர், கடின உழைப்பிற்கு பலன் கிடைத்து, வாக்கு சதவீதம் இரட்டிப்பாகியுள்ளதாக தெரிவித்தார்.

விளம்பரம்

துணை முதலமைச்சர் பதவி குறித்து சந்திரபாபு நாயுடு உடன் விவாதித்து முடிவு எடுப்போம் என்றும், அடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு விவாதம் நடத்துவோம் என்றும் பவன் கல்யாண் கூறினார். ”வட மாநிலங்களில் என்ன தவறு நடந்தது என்று தெரியவில்லை. ஆனால், நரேந்திர மோடியுடன் இணைந்து பலமாக செயல்பட்டதால், எங்கள் கூட்டணி வாக்குகளை அள்ளியது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் முழுமையாக இருக்கிறோம். இரண்டாவது எண்ணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசியலில் இந்த இடத்திற்கு வருவதற்கு அவமானங்களையும், கசப்புகளையும் தாங்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

இதையும் படிங்க : உத்தர பிரதேசத்தை தட்டித் தூக்கிய ‘இந்தியா’ கூட்டணி… பாஜக கூட்டணியை வீழ்த்திய பின்னணி என்ன?

மேலும், இந்த கூட்டணியால் மக்கள் பயன்பெற வேண்டும் என்று விரும்புவதாகவும், அதற்கு மிகப்பெரிய சாத்தியம் இருப்பதாகவும் கூறிய பவன் கல்யாண், மாநில அரசில் ஜனசேனாவிற்காக எதுவும் கேட்கமாட்டோம் என்று நான் கூறவில்லை, ஆனால் முக்கிய பங்கு வகிப்போம் என்றும் கூறினார். ஜெகன் மோகன் ரெட்டியுடன் எவ்வித தனிப்பட்ட போட்டியோ, வெறுப்போ இல்லை என்றாலும், மக்கள் அவருக்கு பாடம் புகட்டி விட்டதாக பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
BJP
,
Parliament Election 2024
,
Parliament elects
,
Parliamentary election 2024
,
Pawan Kalyan

You may also like

© RajTamil Network – 2024