NEET UG Result 2024 : நீட் தேர்வு திருத்தப்பட்ட முடிவுகள் வெளியீடு

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

NEET UG Result 2024 : நீட் தேர்வு திருத்தப்பட்ட முடிவுகள் வெளியீடு…நீட்

நீட்

கடந்த மே 5ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு தேசிய அளவில் நடைபெற்றது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் உத்தரவின்படி, நீட் தேர்வில் குறிப்பிட்ட கேள்விக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களின் திருத்தப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியானது. இதில் 67 பேர் முழு மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்தனர். வினாத்தாள் கசிவு மற்றும் முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விளம்பரம்

கருணை மதிப்பெண் வழங்கிய விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, 1,563 பேருக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. அதில் 813 மாணவர்கள் மறுதேர்வு ஜூன் 23ஆம் தேதி எழுதினர். அவர்களுக்கான புதிய மதிப்பெண்கள் மற்றும் தேர்வை எழுத மறுத்த மாணவர்களில் கருணை மதிப்பெண்கள் நீக்கப்பட்ட புதிய மதிப்பெண்கள் ஜூன் 30ஆம் தேதி வெளியானது.

ஜூலை 8ஆம் தேதி முதல் ஜூலை 23ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட வழக்குகளின் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உண்மை என்பதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், அதனால் பயனடைந்தவர்களை கண்டறிவது அவசியமாக உள்ளது என தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

விளம்பரம்

கொடுக்கப்பட்ட தரவுகளின்படி, வினாத்தாள் கசிவு மற்றும் மதிப்பெண் வழங்குவதில் பெரியளவில் பாதிப்பு இல்லை என தெரியவருவதாக கூறிய உச்சநீதிமன்றம், நீட் தேர்வை ரத்து செய்ய தேவையில்லை என உத்தரவு பிறப்பித்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, ஜூலை 21ஆம் தேதி நகரம் மற்றும் தேர்வு மையம் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இந்நிலையில், மாணவர்கள் திருத்தப்பட்ட மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை https://exams.nta.ac.in/NEET/ என்ற இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

விளம்பரம்இதையும் படிங்க: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு… இன்டர்போல் உதவியை நாடியது தமிழ்நாடு போலீஸ்!

கருணை மதிப்பெண் நீக்கப்பட்ட பிறகு 100/100 மதிப்பெண் பெற்றவர்களின் எணிக்கை 61 ல் இருந்து 17 ஆக குறைந்துள்ளது குறிப்படத்தக்கது.

நீட் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 89,198 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். தேசிய அளவில் 13,15, 853 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகப்படியாக 1, 65, 015 மாணவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து தகுதி பெற்றுள்ளனர்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
NEET Result
,
Tamilnadu

You may also like

© RajTamil Network – 2024