Saturday, September 21, 2024

PK-வின் புதிய கட்சி.. சட்டமன்ற தேர்தலில் செய்யுமா புரட்சி

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

PK-வின் புதிய கட்சி.. சட்டமன்ற தேர்தலில் செய்யுமா புரட்சிபிரஷாந் கிஷோர்

பிரஷாந் கிஷோர்

பாஜக, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக நிபுணராக பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற அரசியல் கட்சியை காந்தி ஜெயந்தியன்று தொடங்க இருக்கிறார். பிகார் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து தொடங்கப்பட்டுள்ள இக்கட்சி தாக்கத்தை ஏற்படுத்துமா என இந்தத் தொகுப்பில் காணலாம்.

2014- ஆம் ஆண்டு மோடி பிரதமரானதற்கு முக்கிய காரண கார்த்தாவாக அறியப்படுபவர் பிரசாந்த் கிஷோர். இதேப்போல்
நிதிஷ்குமார், ஜெகன் மோகன் ரெட்டி, அர்விந்த் கெஜ்ரிவால், மு.க.ஸ்டாலின் போன்றவர்களின் வெற்றிக்கும்
வித்திட்டவர்.

விளம்பரம்

பிகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வியூக நிபுணராக பணியாற்றி மோடியின் வெற்றிக்கு உதவினார். அதன் பிறகே அவர் நாடு முழுவதும் அறியப்பட்டார். அதனைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தல்களில் பல்வேறு கட்சிகளுக்காக பணியாற்றி வெற்றி பெறவும் செய்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் பணியாற்றாத பிரசாந்த் கிஷோர், முன் வைத்த கணிப்புகள் பொய்த்துப்போனதும் அவர் மீதான நம்பிக்கையை சற்று தளர்ந்து போனது.

இந்தச் சூழலில் தான் புதிய கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர். 2022ம் ஆண்டு பிகாரில் ஒரு அமைப்பாக தொடங்கப்பட்ட ஜன் சுராஜ் அரசியல் கட்சியாக உருவெடுக்க உள்ளது. அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று கட்சி தொடங்கப்படும் என்று அறிவித்துள்ள பிரசாந்த் கிஷோர், 2025-ல் பிகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன் காப்பதே பிரதான நோக்கம் என்ற அடிப்படையில் அப்பிரிவைச் சேர்ந்தவர்களே கட்சியின் தலைவராக நியமிக்கப்படுவார்கள் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார். ஓராண்டுக்கு ஒரு பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு
சுழற்சி முறையில் தலைவர் பொறுப்பு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

வேலைவாய்ப்புக்காக பிகாரை விட்டு வெளியேறும் மக்களுக்கு அம்மாநிலத்திலேயே தேவையை நிறைவேற்றித் தரும் வகையிலான பணிகளை பிரசாந்த் கிஷோர் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பிகாரைப் பொறுத்தவரை நிதிஷ்குமார், தேஜஸ்வி என இரு பெரும் தலைவர்கள் உள்ளனர். இவர்கள் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் களம் கண்ட என்டிஏ, இந்தியா கூட்டணிகள் சட்டமன்ற தேர்தலிலும் தொடருமா என்ற கேள்வியும் எழுகிறது.

விளம்பரம்

பாஜக, ஐக்கிய தனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் பலம், பலவீனத்தை முழுமையாக அறிந்த பிரசாந்த் கிஷோர் தேர்தல் களம் காண்பது நிதிஷ், தேஜஸ்வி உள்ளிட்டோருக்கு சவாலானதாகவே அமையும்…

பல்வேறு கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கு வியூகங்களை வகுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோர், கட்சி தொடங்கியும் தலைவராக பொறுப்பு ஏற்காமல் கிங் மேக்கராகவே பணியை தொடரப் போவதாக அறிவித்திருக்கிறார்..

காந்தியத்தை தீவிரமாக பின்பற்றி ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரேவால் தொடங்கப்பட்ட அமைப்பில் முக்கியப் பங்காற்றிய அர்விந்த் கெஜ்ரிவால் பின்னாளில் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் சில அதிர்வுகளை ஏற்படுத்தினார்.

விளம்பரம்இதையும் படிங்க: கைமாறும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்… CSK அணிக்கு சிக்கலா?

அதே காந்திய வழியில் தனது அரசியல் பயணத்தை பிகாரில் இருந்து தொடங்கும் பிரசாந்த் கிஷோர் நேரடி கள அரசியலில் தாக்குப் பிடிப்பாரா ? நீண்ட நெடிய அரசியல் அனுபவம் கொண்ட கட்சிகளுக்கு சவாலாக மாறுவாரா ?

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Bihar

You may also like

© RajTamil Network – 2024