ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..?

by rajtamil
0 comment 29 views
A+A-
Reset

9-வது டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது.

நியூயார்க்,

20 அணிகள் பங்கேற்கும் 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் அமெரிக்கா- கனடா அணிகள் இன்று மோதுகின்றன. இந்த தொடரை இம்முறை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன.

இன்று தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. இதில் அமெரிக்கா, உகாண்டா, கனடா ஆகிய குட்டி அணிகள் 20 ஓவர் உலகக் கோப்பையில் முதல்முறையாக அடியெடுத்து வைக்கின்றன.

பரிசுத் தொகை எவ்வளவு?

இந்த தொடருக்கான பரிசுத்தொகை விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. முந்தைய தொடரில் மகுடம் சூடிய அணிக்கு ரூ.13 கோடியும், 2-வது இடத்தை பிடித்த அணிக்கு ரூ.6½ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. அதே தொகை இந்த முறையும் அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

You may also like

© RajTamil Network – 2024