ஐ.சி.சி. வேண்டுமென்றே செய்கிறது – பாக். முன்னாள் வீரர் விமர்சனம்

by rajtamil
0 comment 51 views
A+A-
Reset

வேண்டுமென்றே இந்தியா – பாகிஸ்தான் போட்டி 2 முறை நடக்கும் வகையில் ஐ.சி.சி. அட்டவணையை உருவாக்குவதாக பாசித் அலி விமர்சித்துள்ளார்.

கராச்சி,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் நாளை ஆரம்பமாக உள்ளது. அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள இந்த தொடரில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ள இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் வரும் ஜூன் -9ம் தேதி நியூயார்க்கில் நடைபெற உள்ளது. ஏனெனில் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் எல்லை பிரச்சினை காரணமாக இரு தொடர்களில் விளையாடுவதை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இவை தவிர்த்து வருகின்றன. ஐ.சி.சி. தொடர்களில் மட்டுமே மோதுகின்றன.

அதனால் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை பார்ப்பதற்கு குறைந்தது ஒரு வருடம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதனாலேயே அந்தப் போட்டியின் மதிப்பு தற்போது பன்மடங்கு எகிறியுள்ளது. மறுபுறம் ரசிகர்களின் ஆவலை உணர்ந்த ஐ.சி.சி. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை ஒவ்வொரு தொடரிலும் ஒரே பிரிவில் இணைத்து அட்டவணையை உருவாக்குகிறது. அதை வைத்து ஐ.சி.சி.க்கு வருமானமும் இரட்டிப்பாக கிடைக்கிறது. மேலும் இரு அணிகளுமே நன்றாக விளையாடினால் நாக் அவுட் சுற்றில் மீண்டும் மோதும் வகையில் ஐ.சி.சி. அட்டவணையை உருவாக்குகிறது.

இந்நிலையில் அதிக வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்படியாவது 2 முறை நடக்கும் வகையில் ஐ.சி.சி. அட்டவணையை உருவாக்குவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி விமர்சித்துள்ளார். அது தற்போது கொஞ்சம் சுமாரான பார்மில் இருக்கும் பாகிஸ்தானுக்கு பின்னடைவை கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "உலகக்கோப்பை தொடர்களில் இந்தியா – பாகிஸ்தான் 2 போட்டிகளில் மோதுவதை ஐ.சி.சி. விரும்புகிறது. இவ்விரு அணிகளும் நாக் அவுட் சுற்றிலும் மோதும் வகையில் அவர்கள் அட்டவணையை உருவாக்குகின்றனர். தற்போது அனைத்தும் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. பாகிஸ்தான் தற்போது கொஞ்சம் குறைவான பார்மில் உள்ளனர். மறுபுறம் ஐ.பி.எல். தொடரில் விளையாடிய இந்திய அணி சிறப்பாக இருக்கிறது. எனவே பாகிஸ்தான் சிறப்பாக செயல்படுவதற்கு பாபர் அசாம் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும்" என்று கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024