குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாக குளியல்

by rajtamil
0 comment 25 views
A+A-
Reset

அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி,

குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த காலங்களில் இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். இந்த சீசனை அனுபவிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவார்கள்.

குற்றாலத்தில் தற்போது சாரல் மழை சிறிது நேரம் மட்டும் விட்டு விட்டு பெய்கிறது. குளிர்ந்த காற்று நன்றாக வீசுகிறது. எனவே, விரைவில் சீசன் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது.

இந்த நிலையில், மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஓரளவு கொட்டுகிறது. தற்போது பள்ளிக்கூட விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் குற்றாலத்திற்கு குவிந்த வண்ணம் உள்ளனர். அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். ஆண்களைவிட பெண்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது. வழக்கமாக கேரளாவில் மழை பெய்யும் போது குற்றாலத்தில் சாரல் மழை பெய்யும். ஆனால் நேற்று சாரல் மழை பெய்யாததால் வெப்ப சூழல் இருந்தது. எனவே இன்னும் ஒரு சில நாட்களில் சாரல் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024