சிக்கிம், அருணாசல பிரதேச சட்டமன்ற தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை

by rajtamil
0 comment 32 views
A+A-
Reset

புதுடெல்லி,

அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் முதல் மந்திரி பெமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 50 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 82.95 சதவிகித வாக்குகள் பதிவாகின.

சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபை தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்ற நிலையில், 79.88 சதவிகித வாக்குகள் பதிவாகின. இரு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.

காலை 6 மணிக்கே வாக்கு எண்ணும் பணி தொடங்குகிறது. முதலில் தபால் ஒட்டுகள் எண்ணப்பட்டு பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்படும். அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதனால், அதற்குள் புதிய அரசு பதவியேற்றுக்கொள்வது அவசியம். இதன் காரணமாகவே வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024