டி20 உலகக்கோப்பை: ஐ.சி.சி. மீது இந்திய வீரர்கள் அதிருப்தி… வெளியான தகவல்

by rajtamil
0 comment 34 views
A+A-
Reset

இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வரும் மைதானத்தில் போதுமான வசதிகள் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

நியூயார்க்,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் நாளை முதல் ஜூன் மாதம் இறுதிவரை நடைபெற இருக்கிறது. இம்முறை இந்த இந்த தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் என்று ஏற்கனவே ஐ.சி.சி. அறிவித்துவிட்டது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றிருக்கும் வேளையில் இந்திய அணியானது 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பிடித்துள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஜூன் 5-ம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக நியூயார்க் நகரில் மோதுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னதாக நியூயார்க் சென்றடைந்த இந்திய அணியானது பயிற்சி செய்வதில் சிரமம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டி20 உலககோப்பை தொடருக்காக நியூயார்க், டெல்லாஸ், புளோரிடா ஆகிய பகுதிகளில் கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. அது தவிர்த்து பயிற்சி செய்வதற்காகவும் சில மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆனால் அவை யாவும் தற்காலிக ஏற்பாடுகளாக மட்டுமே இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் 4 நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கேண்டியாக் பார்க் பகுதியில் பயிற்சி மேற்கொள்ளும் பகுதிக்கும், இந்திய அணி விளையாட மைதானத்திற்கும் இடையில் நீண்ட தூரம் இருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோல் இந்திய அணி வீரர்கள் பயிற்சிக்கு ஏற்றவாறு மைதானங்களும், ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.

இந்திய அணி தரப்பில், எல்லாமே தற்காலிக ஏற்பாடுதான். பிட்சில் இருந்து அனைத்துமே தற்காலிகமானது. அனைத்துமே சராசரியாக செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. பயிற்சி மைதானங்களில் போதுமான வசதிகள் இல்லை என்று இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஏற்கனவே ஐ.சி.சி. நிர்வாகிகளிடம் கூறிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் இந்த தொடரை இங்கு நடத்த திட்டமிட்ட ஐ.சி.சி. மீது இந்திய வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024