டி20 உலகக்கோப்பை; பாபர் அசாம் இந்த இடத்தில் களம் இறங்க வேண்டும் – சோயப் மாலிக்

by rajtamil
0 comment 55 views
A+A-
Reset

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் மூன்றாம் இடத்தில் தான் களமிறங்க வேண்டும் .

கராச்சி,

டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் மற்றும் மூன்றாவது போட்டியானது மழையால் கைவிடப்பட்டது.

2-வது மற்றும் 4-வது டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அசத்தியது. இதன்மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. உலகக்கோப்பை தொடர் நெருங்கும் சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.

அதிலும் குறிப்பாக அணியின் மிடில் ஆர்டர் பேட்டர்கள் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் மூன்றாம் இடத்தில் தான் களமிறங்க வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் சோயப் மாலிக் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, இது ஒரு கடினமான தொடர். ஆனால் நினைவில் கொள்ளுங்கள். நாம் முன்பு கடினமான இடத்தில் இருந்து தற்போது முன்னேறியுள்ளோம். அதேசயம் வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் மூன்றாம் இடத்தில் களமிறங்க வேண்டும்.

ஏனெனில் மிடில் ஓவர்களில் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்யும் பேட்டர் நிச்சயம் தேவை. அதற்கான சிறந்த தேர்வு பாபர் அசாம் தான். ஏனெனில் அவரின் வழிகாட்டுதலுக்கு கீழ் மிடில் ஆர்ட்ர் பேட்டர்களால் மேற்கொண்டு சிறப்பாக விளையாட முடியும்.இவ்வாறு மாலிக் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024