பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

by rajtamil
0 comment 24 views
A+A-
Reset

ஒவ்வொரு மாணவ,மாணவிகளுக்கு ஒரு வங்கி கணக்கு கட்டாயம் தேவைப்படுவதால் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்குகளை பள்ளிகளிலேயே தொடங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அந்த சுற்றிக்கையில்,

1-ம் வகுப்பு முதல் 12-ம் வப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவி தொகைகள் மற்றும் ஊக்க தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்த உதவித்தொகைகள் மாணவ-மாணவிகளுக்கு குறித்த நேரத்தில் நேரடியாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்திடும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வங்கி கணக்கு கட்டாயம் தேவைப்படுவதால் இந்த சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அந்தந்த பகுதியில் உள்ள தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களின் மேற்பார்வையில் வங்கி கணக்குகள் தொடங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024