மகளை பறிகொடுத்ததால் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை – இளையராஜா உருக்கம்

by rajtamil
0 comment 50 views
A+A-
Reset

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது.

சென்னை,

தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் இசைஞானி இளையராஜா. 1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில், பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுத வெளியான படம்தான் அன்னக்கிளி. இப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார்.

இவர் 2010-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும் 2018-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும் பெற்றார். இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது. இந்த நிலையில், இசைஞானி இளையராஜா இன்று தனது 81-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிறந்தநாளையொட்டி இசைஞானி இளையராஜா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

"பிறந்தநாள் வாழ்த்துகளை நீங்கள்தான் எனக்கு சொல்கிறீர்களே தவிர, எனது மகளை இழந்த துக்கத்தில் இருப்பதால், எனக்கு இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை. ரசிகர்களுக்காகத்தான் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம்; எனக்கு அது இல்லை. நன்றி… வணக்கம்" என்று உருக்கமாக கூறினார்.

Original Article

You may also like

© RajTamil Network – 2024