ஃபாஸ்டேக்கில் பணம் இல்லை: அரசுப் பேருந்துகளுக்கே இந்த நிலையா? குமுறும் பயணிகள்!

மதுரை: ஃபாஸ்டேக்கில் பணம் இல்லாததால், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை, சுங்கச் சாவடியைக் கடந்து செல்ல ஊழியர்கள் அனுமதிக்காமல், பேருந்துகளை திருப்பி அனுப்பியுள்ளனர்.

மதுரை மாவட்டம், கப்பலூர் சுங்கச் சாவடியை இன்று காலை கடக்க முயன்ற அரசுப் பேருந்துகளில் ஒட்டப்பட்டிருந்த ஃபாஸ்டேக் கணக்கில் பணம் இல்லை எனக் கூறி சுங்கச் சாவடி ஊழியர்கள் பிரச்னை செய்தனர்.

அரசுப் பேருந்து ஓட்டுநர்களும், நடத்துநர்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், பேருந்துகளை கடந்து செல்ல ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.

சுமார் 10க்கும் அதிகமான அரசுப் பேருந்துகள், சுங்கச் சாவடியை கடந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மாலத்தீவு அரசுக்கு மனமாற்றம்? மோடிக்கு எதிரான அமைச்சர்கள் ராஜிநாமா! இந்தியா வரவிருக்கும் அதிபர்!!

பல பேருந்துகள் புறப்பட்ட இடத்துக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதால், பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அரசுப் பேருந்துக்கே இந்த நிலையா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

பேருந்துகள், சுங்கச் சாவடியிலிருந்து பின்னோக்கி செலுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டு வருவதால் அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!