ஃபிரேசர் மெக்கர்க் அதீத திறமைசாலி: ரிக்கி பாண்டிங் புகழாரம்!

ஆஸ்திரேலிய அணியின் வளர்ந்துவரும் நட்சத்திரமான ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் அதீத திறமைசாலி என்று ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு உலகக் கோப்பைகளை வென்று தந்த முன்னாள் கேப்டனும், ஐபிஎல்லில் தில்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங், இளம் பேட்டர் ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்கை உலக கிரிக்கெட்டில் மிகவும் நம்பிக்கைக்குரிய திறமைசாலிகளில் ஒருவர் என்று பாராட்டியுள்ளார்.

ஒரே ஓவரில் 30 ரன்கள் விளாசிய டிராவிஸ் ஹெட்: ஆஸி. அபார வெற்றி!

22 வயதான ஃப்ரேசர் மெக்கர்க்கின் சிதறடிக்கும் பேட்டிங் திறன்களை குறிப்பிட்ட ரிக்கி பாண்டிங் அவரது பேட்டிங் திறனை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

ரிக்கி பாண்டிங் புகழாரம்

இதுபற்றி ரிக்கி பாண்டிங் கூறுகையில், “செப்டம்பர் 11 அன்று சவுத்தாம்ப்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் முதல் டி20 போட்டியில் ஃப்ரேசர் மெக்கர்க் இடம்பெறவில்லை என்றாலும் , 2024 இல் ஐபிஎல்லில் தில்லி கேப்பிடல்ஸுடன் அவர் அறிமுகமானதில் இருந்து ஒரு திறமையான பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார்.

அதிரடி பேட்டிங்கின் ரகசியம் பகிர்ந்த டிராவிஸ் ஹெட்!

ஃப்ரேசர் மெக்கர்க்கின் திறன் அபாரமானது, மேலும் அவர் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட், டி20, ஒருநாள் என்று எல்லாப் போட்டிகளிலும் முக்கிய வீரராக முடியும். அவர் ஒரு அதீத திறமைசாலி. அவர் பந்தை மைதானத்தில் நாலாபுறமும் விளாசப் பார்க்கிறார். அவர் பந்து மீது பயமில்லாமல் கடினமாக எல்லாத் திசைகளிலும் அடித்து ரன் குவிக்கிறார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எல்லா பார்மட்களிலும் விளையாடக் கூடிய திறமையான வீரர்” என்றும் தெரிவித்துள்ளார்.

சச்சின் சாதனையை முறியடிக்கும் கோலி! 58 ரன்களே தேவை!

ஐபிஎல்லில் அதிரடி காட்டிய ஃப்ரேசர் மெக்கர்க்

2024 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஃப்ரேசர் மெக்கர்க் அனைவரும் வியக்கும் வகையில் பேட்டிங் செய்து அசத்தினார். அதிரடிக்கு பேர் போனவரான ஃப்ரேசர் மெக்கர்க் 9 போட்டிகளில் விளையாடி 234.04 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 330 ரன் எடுத்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.

பவர்பிளே ஓவர்களான முதல் ஆறு ஓவர்களில் மட்டும் 106 பந்துகளை எதிர்கொண்டு 250.94 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 266 ரன்கள் குவித்து அசத்தியும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்