அக்கரைப்பேட்டை மீனவர்கள் தாக்குதல்: நடவடிக்கை கோரி செருதூர் மீனவர்கள் வேலைநிறுத்தம்

அக்கரைப்பேட்டை மீனவர்கள் தாக்குதல்: நடவடிக்கை கோரி செருதூர் மீனவர்கள் வேலைநிறுத்தம்

நாகப்பட்டினம்: செருதூரைச் சேர்ந்த பைபர் படகு மீனவர்களின் மீது அக்கரைப்பேட்டை விசைப்படகு மீனவர்கள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து செருதூர் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் மீனவர் கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற பைபர் படகு மீனவர்கள் மீது அக்கரைப்பேட்டையை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் செருதூரை சேர்ந்த 3 மீனவர்கள் காயமடைந்து நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அக்கரைப்பேட்டை மற்றும் செருதூர் மீனவர்களுக்கு இடையே நேற்று இரவு (29ம் தேதி) செருதூரில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து, செருதூர் பகுதி மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் 400 பைபர் படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் தாக்கிய நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என செருதூர் மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

மதுரையில் துணை முதல்வர் உதயநிதியை நேரில் சந்தித்து நடிகர் வடிவேலு வாழ்த்து

‘இனி தினமும் உங்களை சந்திப்பேன்’ – மகளிரணி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு

தனியார் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மேலும் 7 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி