அக்.10ல் லாவோஸ் நாட்டுக்குச் செல்கிறார் பிரதமர் மோடி!

தெற்காசிய நாடுகளில் ஒன்றான லாவோஸ் நாட்டிற்குப் பிரதமர் நரேந்திர மோடி அக். 10, 11 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: மெரினா சாகச நிகழ்ச்சியில் மட்டுமா? விமானப் படை அணிவகுப்பிலும் அதே நிலைதான்!

லாவோஸ் நாட்டில் 21வது ஆசிய-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 19வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு நடைபெறுகிறது. உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடிக்கு லாவோஸ் நாட்டின் பிரதமர் சோனேக்சே சிபாண்டோன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதையும் படிக்க: ‘மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன்’ – இல்திஜா முஃப்தி

இந்த அழைப்பை ஏற்று இரண்டு உச்சி மாநாடுகளிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டு இருதரப்பு சந்திப்புகளை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து லாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்