அக்.14-ல் சென்னைக்கு கனமழை: பாலச்சந்திரன்

சென்னையில் வரும் அக். 14-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

சென்னையில் ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். வரும் அக். 14-ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 7 நாள்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிக்க: ஓடிடியில் வாழை: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

மத்திய அரபிக்கடல் பகுதிகளில் வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் அக்.12ல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகிறது.

அக். 12-ல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக். 13, 14 ஆகிய தேதிகளில் டெல்டா மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார்.

Related posts

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக